ரயில்வே பயணிகளுக்கு IRCTC-ன் முக்கிய அறிவிப்பு!

|

இந்தியாவில் கொரோனாவை எதிர்கொள்வதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூட்டும் கூடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு

உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும்

அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Whatsapp ஸ்டேட்டஸ் டிப்ஸ்: 24 மணி நேரத்திற்கு பிறகும் பிரியமானவர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?Whatsapp ஸ்டேட்டஸ் டிப்ஸ்: 24 மணி நேரத்திற்கு பிறகும் பிரியமானவர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு

மேலும் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நாட்களில் மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கும் படி கை கூப்பி கேட்டுக் கொண்டார். நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் உயிர் தான் முக்கியம் எனவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Lockdown ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதி

Lockdown ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதி

இந்தியாவில் Lockdown செய்யப்பட்டுள்ள நிலையில் ரயில்வே பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஒரு பெரிய வசதியை அறிவித்துள்ளது. Lockdown போது ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டாம் என்று IRCTC பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகள்

முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகள்

பயணிகள் முன்பதிவு செய்துள்ள டிக்கெட்டுகள் தானாக ரத்து செய்யப்படும் என்றும் பயணிகளின் மொத்த தொகையும் அவர்களுக்கு கிடைக்கும் என்றும் பயணிகளுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!ரெட்மி நோட் 9எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.! பட்ஜெட் விலை.!

குறைந்த பணம் கிடைக்கும் வாய்ப்பு

குறைந்த பணம் கிடைக்கும் வாய்ப்பு

பயணிகளின் சார்பாக டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகள் தனது டிக்கெட்டை ரத்து செய்தால், அவர்களுக்கு குறைந்த பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. ரயில்வேத்துறை ரத்து செய்வதாக அறிவித்துள்ள அந்த குறிப்பிட்ட ரயில்களுக்கான இ-டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
IRCTC announced important information for railway passangers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X