Home
News

IRCTC-ன் புதிய மாற்றம்.. இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புது Mobile ஆப்ஸ்.. இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) உடன் இணைந்து ஸ்வாரெயில் (SwaRail) என்ற புதிய டிக்கெட் புக்கிங் மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆப்ஸ் டிக்கெட் புக்கிங் (Train ticket booking) மட்டுமின்றி, PNR ஸ்டேட்டஸ், ரயில் தகவல், உணவு ஆர்டர் என்று பல சேவைகளை ஒன்றாக வழங்கும் புதிய தளமாக செயல்படுகிறது. இந்த ஆப்ஸை IRCTC தற்போது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS தளங்களில் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கும் படி அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ரயில்வே அதன் சூப்பர் ஆப்ஸ் (Super App) மொபைல் செயலியை நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்போது மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்துள்ளது. IRCTC ஆப்ஸ் மற்றும் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் (IRCTC online train ticket booking) செய்ய சிரமப்படும் பயணிகள் இனி மிக எளிமையாக டிக்கெட் புக்கிங் செய்ய அனுமதிக்கும் புதிய சூப்பர் ஆப்ஸ் (Super Apps) ஸ்வாரெயில் ஆப்ஸை (SwaRail mobile apps) IRCTC அறிமுகம் செய்துள்ளது.

IRCTC-ன் புதிய மாற்றம்.. ரயில் டிக்கெட் புக் செய்ய புது Mobile ஆப்ஸ்..

IRCTC-ன் புதிய மாற்றம்.. இனி ரயில் டிக்கெட் புக் செய்ய புது Mobile ஆப்ஸ்:

IRCTC இதுவரை 6 முதல் 7 வகையான வெவ்வேறு மொபைல் ஆப்ஸ்கள் (IRCTC mobile apps) மூலம் இதுவரை தனது பலதரப்பட்ட ரயில் பயண சேவைகளை வழங்கி வந்தது. டிக்கெட் புக்கிங் (online ticket booking), PNR ஸ்டேட்டஸ் (PNR status check), ரயில் நிகழ்நேர இருப்பிடம் (Train live location), புகார்கள் (train service related complaints), உணவு ஆர்டர் (food order on track) செய்வது போன்ற பல சேவைகளை அணுக, இந்திய ரயில்வே தனித்தனி ஆப்ஸ்களை செயல்பாட்டில் வைத்திருந்தது.

ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரியையாக, ரயில் சேவை தொடர்பான அணைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்படியான ஒரு சூப்பர் ஆப்ஸை IRCTC தற்போது அறிமுகம் (IRCTC Super Apps) செய்துள்ளது. இந்த புதிய ஸ்வாரெயில் ஆப்ஸ் தற்போது பீட்டா வெர்ஷனில் (SwaRail Beta version) மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி ரயில் பயணிகள், இந்த ஒரு ஆப்ஸை மட்டும் பயன்படுத்தி பல்வேறு சேவைகளை அணுக முடியும் என்று IRCTC தெரிவித்துள்ளது.

SwaRail ஆப்ஸ் மூலம் இனி எந்தெந்த IRCTC சேவைகளை ஒரே இடத்தில் அணுகலாம்?

உதாரணமாக, இனி SwaRail ஆப்ஸ் மூலம் இனி நொடியில் நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யலாம், ஈஸி கேன்சலேஷன் (easy cancellation), ரீஃபண்ட் பெறுவது (train ticket refund), PNR ஸ்டேட்டஸ் செக் செய்வது, ரயிலின் லைவ் ட்ராக்கிங், ரயில் சேவை தொடர்பான புகார் வழங்குதல், அன்ரிசர்வுடு டிக்கெட் புக்கிங் (UTS), உணவு ஆர்டர் (food order on train) செய்வது போன்ற அணைத்து சேவைகளையும் இனி பொதுமக்கள் இன்ற ஒற்றை SwaRail ஆப்ஸ் மூலம் செய்து முடிக்கலாம்.

இது தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய தளங்களிலும் பயன்படுத்த கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு (android) பயனர்களை தற்போது கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலமாகவும், iOS பயனர்கள் ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோர் (Apple Apps Store) வழியாகவும் இந்த SwaRail ஆப்ஸை டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டா டெஸ்டிங் காரணமாக குறிப்பிட்ட சில எண்ணிக்கையிலான பயனர்கள் மட்டுமே இப்போது இதை அணுக முடியும்.

விரைவில் இந்த புதிய IRCTC-ன் ஸ்வாரெயில் ஆப்ஸ் அணைத்து மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்த கிடைக்குமென்று IRCTC தகவல் தெரிவித்துள்ளது. IRCTC-ன் முந்தைய ஆப்ஸ்கள் போல இல்லாமல், இது குறைந்த அளவு ஸ்டோரேஜ்ஜை உங்கள் போனில் பயன்படுத்துகிறது. அதேபோல், டிக்கெட் புக்கிங் செய்யும் பொழுது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளையும் இந்த ஆப்ஸ் குறைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த முறை ரயில் டிக்கெட் புக் (Use SwaRail app for train ticket booking) செய்ய புது SwaRail ஆப்ஸ் பயன்படுத்தி பாருங்கள்.

Best Mobiles in India

English summary
IRCTC and CRIS Launched SwaRail Mobile Apps as Super App For Train Ticket and Service On Android and iOS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X