ரயில் டிக்கெட்: இப்படி கூட மோசடி நடக்குமா? சிக்கிய ஆன்லைன் ஏஜெண்டுகள்.!

|

இப்போது உள்ள புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் லாபாம் சம்பாதிக்க பார்க்கின்றனர் என்று தான் கூறவேண்டும், அதன்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் தனியார் ஏஜென்டுகள் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது ஐ.ஆர்.சி.டி.சி-யின் லோகோ இல்லாத பயணச்சீட்டு செல்லாது என கூறியுள்ள ஆர்.பி.எஃப் போலீசார், இது குறித்து பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடள் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தனியார் ஏஜெண்டுகள்

தனியார் ஏஜெண்டுகள்

மக்கள் வெளியூர்களுக்கு செல்ல அதிகமாக பயன்படுத்துவது ரயில் தான், எனவே குறிப்பிட்ட நாட்களில் செல்லவேண்டியிருப்பவர்கள், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கம். இதில் தனியார்ஏஜெண்டுகள் இதற்கென பணம் பெற்றுக்கொண்டு முன்பதிவு செய்து கொடுக்கின்றனர்.

மின்னஞ்சல் முகவரி

மின்னஞ்சல் முகவரி

ஆனால் நாம் கவனிக்க வேண்டியது ரயில்வே நிர்வாகத்தின் அங்கீகாரம் பெற்ற ஐஆர்சிடிசி(IRCTC) அமைப்புஅவர்களுக்கு ஒரே ஒரு மின்னஞ்சல் முகவரியோடு முன்பதிவு செய்வதற்கான அனுமதி வழங்குகிறது.

BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?

டிக்கெட் கிடைக்கமால் போவது வாடிக்கையாகி வந்தது

டிக்கெட் கிடைக்கமால் போவது வாடிக்கையாகி வந்தது

இருந்தபோதிலும் நுட்பமாக கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவலி மட்டுமல்லாமல், தனிபட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்தி, முன்பதிவு தொடங்கி 20வினாடிகளில், புதிய தொழிநுட்பத்தினால் நூற்றுக்கணக்கான ரயில் டிக்கெட்டுகளை பதிவிடுவதால் பலருக்கு டிக்கெட் கிடைக்கமால் போவது வாடிக்கையாகி வந்தது.

முன்பதிவு

எனவே இதுபோன்ற புகாரின் அடிப்படையில் ரியல்வே நிர்வாகத்தால் அங்கிகாரம் பெற்ற ஐஆர்சிடிசி சர்வரை ஆய்வுசெய்து போது, பலர் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ரயில் டிக்கெட்டுகளை தொடர்ந்து முன்பதிவு செய்ததும் தெரியவந்தது.

 ஆர்பிஎஃப் போலீசார்

ஆர்பிஎஃப் போலீசார்

இதை தொடர்ந்து தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை உள்ளிட்ட 6மண்டலத்தில் இருக்கும் 39தனியார்ஏஜெண்டுகள் நடத்தி வந்த டிராவல்ஸ் அலுவலகங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை நடத்தினர்,இதில் ஒரு லட்சத்துக்கும் மேலான முன்பதிவு டிக்கெட்டுகளை பறிமுதல் செய்த ஆர்பிஎஃப் போலீசார் 39பேரை
ரயில்வே சட்டப்படி கைது செய்தனர் எனத் தெரியவந்துள்ளது.

BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?BSNL 999 Plan: கூடுதல் நன்மையை வழங்கிய பிஎஸ்என்எல்.! என்ன தெரியுமா?

 கருப்பு பட்டியலில் சேர்த்தது

கருப்பு பட்டியலில் சேர்த்தது

மேலும் ரயில் டிக்கெட்டுகள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்,பின்பு சட்டவிரோதமாக செயல்பட்ட 70-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கருப்பு பட்டியலில் சேர்த்தது மட்டுமல்லாமல்,ஐஆர்சிடிசி வழங்கிய அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளனர்.

ஆன்லைன் டிக்கெட்

ஆன்லைன் டிக்கெட்

அதன்பின்னர் தனிப்பட்ட இமெயில் ஐடி மூலம் ஏஜெண்டுகளிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள், ஆர்.பி.எஃப் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுவதால் கடைசி நேரத்தில் பயண டிக்கெட் ரத்து செய்யப்டுவதை தவிர்க்க ஆன்லைன் டிக்கெட்டுகளில் ஐஆர்சிடிசி அங்கிகாரம் இருக்கிறதா என கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
IRCTC Alerts It's Passengers To Be Beware Of Fake Agents : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X