20,000 ரூபாய் பட்ஜெட்ல சூப்பரா ஒரு Mobile வாங்கணுமா? அதுவும் ப்ரோ மாடலா இருக்கணுமா? இதான் பெஸ்ட் சாய்ஸ்..
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget Smartphone) சாதனங்களுக்கு தான் இப்போது டிமாண்ட் ஜாஸ்தியாக உள்ளது. குறிப்பாக ரூ.15,000 முதல் ரூ.25,000 விலைக்குள் தான் இந்தியாவில் அதிகப்படியான ஸ்மார்ட்போன் சாதனங்கள் விற்பனை செய்யப்படுகிறது என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது. இதிலும் குறிப்பாக, மக்கள் பெரும்பாலானோர் ரூ.20,000 விலை புள்ளியில் பெஸ்ட் மொபைல் சாதனத்தை (Best mobile phones under Rs 20,000) தான் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி நீங்களும் ரூ.20,000 விலை வரம்பில் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது.
இப்போது நீங்கள் ஒரு புது ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலோ அல்லது ரூ. 20,000 பட்ஜெட்டில் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன் சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலோ, உங்கள் தேர்வில் நிச்சயமாக இந்த புதிய iQOO Z9s Pro இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது.

பட்ஜெட் விலையில் பெஸ்ட் போனா? iQOO Z9s Pro விலை என்ன?
பட்ஜெட் செக்மென்ட்டில் ப்ரோ வேரியண்ட் மாடலே வாங்க கிடைக்கிறது என்பது தான் இதில் கூடுதல் சிறப்பே. விவோ (Vivo) ஸ்மார்ட்போன் நிறுவனத்திற்கு சொந்தமான iQOO பிராண்ட், இப்போது இந்தியாவில் iQOO Z9s Pro போனின் விற்பனையை துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் தற்போது அறிமுக சலுகையுடன் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. iQOO Z9s Pro விலை பற்றிய விபரங்களை முதலில் பார்க்கலாம்.
iQOO Z9s Pro போனின் 8ஜிபி + 128ஜிபி மாடல் ரூ. 24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் சலுகை விலை ரூ. 21,999 விலையில் வாங்க கிடைக்கிறது. iQOO Z9s Pro போனின் 8ஜிபி + 256ஜிபி மாடல் ரூ. 26,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக சலுகை விலை ரூ. 23,999 மட்டுமே.
இறுதியாக, iQOO Z9s Pro போனின் 12ஜிபி + 256ஜிபி போனின் விலை ரூ. 28,999 என்றும் இதன் பயனுள்ள சலுகை விலை என்று அமேசான் தளத்தில் ரூ. 25,999 என்ற விலை தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது. இது Amazon.in மற்றும் iQOO.com இலிருந்து பிரத்தியேக சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
iQOO Z9s Pro சிறப்பம்சம்:
இதில் உடனடி தள்ளுபடி ICICI வங்கி மற்றும் HDFC கிரெடிட்/டெபிட்/EMI விருப்பங்களில் ரூ. 3000 அல்லது 4 மாதங்கள் வரை எளிதான EMI விருப்பத்துடன் அனைத்து சாதனங்களிலும் ரூ. 3000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. இந்த iQOO Z9s Pro போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசுகையில், இது 6.77" இன்ச் கொண்ட Full HD AMOLED மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த டிஸ்பிளே 4500 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 120Hz ரெஃப்ரஷ்க் ரேட் மற்றும் 300Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகியவற்றை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Qualcomm Snapdragon 7 Gen 3) சிப்செட்டை கொண்டிருக்கிறது. இந்த போன் 8GB / 12GB LPDDR4X ரேம் (RAM) உடன் 128GB / 256GB UFS2.2 ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் டூயல் நானோ சிம் கார்டு அம்சத்தை கொண்டுள்ளது. இந்த iQOO Z9s Pro ஸ்மார்ட்போன் 50MP Sony IMX 882 சென்சார், 8MP அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2MP டெப்த் சென்சார் உடன் பின்புறத்தில் ஆர லைட்டிங்கை (Aura light) கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16MP செல்பி கேமராவை வழங்குகிறது. இது 5500mAh பேட்டரி உடன் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








