ஒரே போன்ல் நல்லா பெருசா செஞ்சுட்டாங்க.! iQOO Z8-ல் வரும் மிகப்பெரிய மாற்றங்கள்.. இதோ..
iQOO நிறுவனம் கடந்த சில ஆண்டாக மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது. மிகவும் சிறப்பான அம்சங்களுடன், நியாயமான விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி, எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது iQOO மொபைல் போன்கள்.
இந்த வரிசையில், அடுத்த ஷாக்கிங் ஸ்மார்ட்போனாக களமிறங்கவிருக்கும் சாதனம் தான் iQOO Z8 என்ற ஸ்மார்ட்போன் மாடலாகும். iQOO நிறுவனம் மே மாதத்தில் iQOO நியோ 8 (iQOO Neo 8) மற்றும் iQOO நியோ 8 ப்ரோ (iQOO Neo 8 Pro) என்ற மாடலை அறிமுகப்படுத்தியது.

அதற்கு பிறகு, நிறுவனம் இப்போது இந்த புதிய iQOO Z8 என அழைக்கப்படும் புதிய Z சீரிஸ் சாதனத்தை அறிமுகப்படுத்துவதில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. இது iQOO Z சீரிஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்ட iQOO Z7 இன் வாரிசாக வெளிவரும் என்று கூறப்படுகிறது. இது ஒரு மிட் ரேஞ் பட்ஜெட் செக்மென்ட் போனாகும்.
சமீபத்தில், இந்த புதிய iQOO Z8 ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்களை டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DigitalChatStation) வலைப்பக்கம் வெளியிட்டிருந்தது. இதில் iQOO Z8 ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்ச தகவல்கள் லீக் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் சில காலங்களில் இந்தியாவில் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய iQOO Z8 ஸ்மார்ட்போனின் அம்சங்களில் நிறுவனம் மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது போல தெரிகிறது. முதல் விஷயமாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் நிறுவனம் ஒரு அட்டகாசமான மேம்படுதலை நிலைநிறுத்தியுள்ளது. அதாவது, இந்த iQOO Z8 போனின் டிஸ்பிளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வெளிவரும் LCD பேனலைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் டிஸ்பிளே அளவு இதன் முன்னோடி மாடல iQOO Z7 ஸ்மார்ட்போனில் காணப்படும் 6.64' இன்ச் டிஸ்பிளேவை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iQOO Z7 சாதனம் 6.64' இன்ச் கொண்ட FHD+ IPS LCD டிஸ்ப்ளேவை (2388×1080 பிக்சல்கள்) உடன் கொண்டிருந்தது. இது 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த லீக் தகவலின் படி, iQOO Z8 ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 8200 (Dimensity 8200 SoC) சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் முன்னோடி மாடலான iQOO Z7 சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782 (Qualcomm Snapdragon 782) சிப்செட்டை கொண்டிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக, வெளியான குறிப்பில் இந்த புதிய iQOO Z8 ஸ்மார்ட்போன் 2,440mAh பேட்டரிகளின் இரட்டை செல் பேட்டரி உள்ளமைவுடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 5000mAh இன் ஒருங்கிணைந்த திறன் கொண்டதாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மிகப்பெரிய மாற்றமாக, இந்த ஸ்மார்ட்போன் சாதனம் அதன் ஸ்டோரேஜ் பிரிவிலும் சில பெரிய மாற்றங்களை கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. லீக் தகவலின் படி, இந்த புதிய iQOO Z8 ஸ்மார்ட்போன் LPDDR5 ரேம், மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் அம்சத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.35,000 முதல் ரூ.39,999 என்ற விலை புள்ளியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








