Home
News

இந்த போனை வாங்க கியூ கட்டி நிக்கும் மக்கள்.. ஆரம்ப விற்பனையே அமோகம்.. இதில அப்படி என்ன இருக்கு?

iQOO Z7 Pro 5G இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.2,000 பிளாட் தள்ளுபடி உடன் அறிமுக சலுகைகளுடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. புது iQOO Z7 Pro 5G போனின் விற்பனை விபரங்களை பற்றி பார்க்கலாம்.

iQOO Z7 Pro 5G கடந்த வாரம் இந்தியாவில் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய iQOO ஸ்மார்ட்போன் அதன் 3D கர்வுடு வளைந்த டிஸ்பிளேவுடன் தரமான வடிவமைப்பிற்காக தனித்து நிற்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் செக்மென்ட்டில் அட்டகாசமான அம்சங்களை வழங்குகிறது. இது AMOLED 120Hz டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது.

இந்த போனை வாங்க கியூ கட்டி நிக்கும் மக்கள்.. ஆரம்ப விற்பனையே அமோகம்..

இது 256 ஜிபி வரை கோடா ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுடனும், 66W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பல அம்சங்களை ஒருங்கிணைந்து ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக வந்துள்ளது. iQOO Z7 Pro 5G இன் முதல் விற்பனை இன்று தொடங்குகிறது. எனவே உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களும் இந்த பதிவுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

iQOO Z7 Pro 5G சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய அடிப்படை வேரியண்ட் மாடலாக ரூ.23,999 விலையில் வருகிறது. இதன் 256ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.24,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் iQOO இன் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

iQOO ஆனது SBI வங்கி மற்றும் HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு பிளாட் ரூ.2,000 தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடி உள்ளிட்ட பிரத்யேக அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சாதனம் கிராஃபைட் மேட் மற்றும் ப்ளூ லகூன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கிறது.

இந்த போனை வாங்க கியூ கட்டி நிக்கும் மக்கள்.. ஆரம்ப விற்பனையே அமோகம்..

iQOO Z7 Pro 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

இந்த புதிய iQOO Z7 Pro 5G ஆனது 6.78' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவை, 120Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 300Hz டச் சாம்பிளிங் வீதம் மற்றும் 1300 நீட்ஸ் பீக் பிரைட்னச போன்ற அம்சங்களுடன் வழங்குகிறது. இது ஆர்ம் மாலி ஜி610 ஜிபியு (ARM Mali-G610 GPU) உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7200 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7200 5G) மூலம் ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இது 8 ஜிபி + 128 ஜிபி, 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வாங்க கிடைக்கிறது. இது iQOO Z7 Pro 5G ஆனது 64MP பெரிமாரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 2MP பொக்கே லென்ஸ் மற்றும் 16MP முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது. இது 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது Android 13 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 13 இல் இயக்குகிறது.

iQOO Z7 Pro 5G அதன் விலைக்கு ஸ்டைலான மற்றும் பிரீமியம் வடிவமைப்பை வழங்குகிறது. டெக் வட்டாரத்தில் நடத்தப்பட்ட மதிப்பாய்வில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த செயல்திறனை வழங்குவதாக கூறியுள்ளது. இது ஈர்க்கக்கூடிய பேட்டரி பயனையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. iQOO Z7 Pro 5G நல்ல பார்வை அனுபவத்துடன் வருகிறது. அதன் கேமராக்கள் சிறப்பாக இருந்திருக்கக்கூடும் என்றாலும், ஸ்மார்ட்போனில் இன்னும் கண்ணியமான ஒளியியல் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z7 Pro 5G sale starts in India today
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X