ஏப்ரல் 27 வரை காத்திருங்கள்- 66 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஐக்யூ இசட்6 ப்ரோ
ஐக்யூ இசட்6 ப்ரோ இந்தியாவில் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி வசதி இடம்பெறும் என தகவல் தெரிவித்துள்ளது. ஐக்யூ இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் இந்த சாதனத்தில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ இசட்6 ப்ரோ
ஐக்யூ நிறுவனம் தனது இசட் தொடரின் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஐக்யூ இசட்6 ப்ரோ இந்தியாவில் ஏப்ரல் 27 அன்று அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறது. நிறுவனம் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மற்றும் சார்ஜிங் வேகம், அதன் செயலி மற்றும் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தின் அம்சங்களை பார்க்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட் ஆதரவு
ஐக்யூ இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி பிளாட்ஃபார்ம் மூலம் இயக்கப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 66 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் அம்சத்தோடு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 32923எம்எம்2 ஃபிளாக்ஷிப் விசி லிக்விட் கூலிங் வசதி இடம்பெறும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் ஐக்யூ இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனானது அமேசான்.இன் மற்றும் ஐக்யூ.காம்-ல் வாங்க கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் ரூ.25,000 விலைப் பிரிவில் கிடைக்கும்.

மூன்று கேமரா அமைப்பு
ஐக்யூ இசட்6 ப்ரோ ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. முதன்மை சென்சார் பிரதான வளையத்திலும் அடுத்த இரண்டு சென்சார்கள் அதன் கீழ் புறத்திலும் பொறுத்தப்பட்டிருக்கும். ஐக்யூ நிறுவனம் சீனாவில் ஐக்யூ நியோ 6 சாதனத்தை அறிமுகம் செய்தது. இது நிறுவனத்தின் சமீபத்திய முதன்மை சாதனமாகும். இந்த சாதனம் 6.62 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் 1300 நிட்ஸ் உச்ச பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 91.4% டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி
இந்த சாதனமானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. ஐக்யூ நியோ 6 கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி சாம்சங் ஐசோசெல் முதன்மை சென்சார், 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் மற்றும் 2 எம்பி போர்ட்ரெய்ட் கேமராவைக் கொண்டிருக்கிறது.

6.51 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
அதேபோல் நிறுவனம் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.51 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவிற்கு சாதனத்தின் மேல்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் வசதி இருக்கிறது. ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் 720x1600 பிக்சல்களின் HD+ ரெசல்யூஷன் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே டூ உடல் விகிதம் 89% ஆகும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இருக்கிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவு
ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் ஆதரவோடு வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியோடு வருகிறது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐக்யூ யூ5எக்ஸ் ஸ்மார்ட்போனில் மெமரி நீட்டிப்பு ஆதரவுக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ ஃபேஸ் அன்லாக் மற்றும் பாதுகாப்புக்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது.


Click it and Unblock the Notifications