ஐக்யூ இசட்6 5ஜி மார்ச் 16 இந்தியாவில் அறிமுகம்: குளிரூட்டல் வசதி, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே- ரூ.15,000-க்கு குறைவு
ஐக்யூ இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டாகும், இது வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும். ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம் குறித்து பார்க்கையில் இது ப்ரீமியம் மாடல் சாதனமாக இருக்கிறது. ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் முன்னதாகவே பிரீமியம் மற்றும் மிட்ரேஞ்ச் பிரிவில் பிரபலமானதாகும். ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் வந்துள்ளன. ஐக்யூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஐக்யூ இசட்6 5ஜி
ஐக்யூ தனது சமீபத்திய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அது ஐக்யூ இசட்6 5ஜி ஆகும், இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்யூ இசட்6 5ஜி ஆனது கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ இசட்5 5ஜி ஸ்மார்ட்போனின் வாரிசு ஆகும். ஐக்யூ இசட்6 5ஜி மார்ச் 16 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனின் வெளியீடு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, இந்த போன் இந்தியாவில் மார்ச் 16 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஐக்யூ இசட்6 5ஜி இந்திய வெளியீடு
ஐக்யூ இசட்6 5ஜி இந்திய வெளியீட்டு டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகையில், ஐக்யூ தனது அடுத்த இசட் சீரிஸ் சாதனத்தை இந்தியாவில் மார்ச் 16 ஆம் தேதி வெளியிடும் என தெரிவித்துள்ளார். அதேபோல் இதன் கூடுதல் விவரங்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. இதற்கிடையில், வரவிருக்கும் ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐக்யூ இசட்6 5ஜி மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது. கூடுதலாக, அதிகாரப்பூர்வ டீஸரில் ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்ஃபோனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்ஃபோனின் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், ஐக்யூ வரவிருக்கும் ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எதையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனில் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் எதிர்பார்க்கலாம். ஐக்யூ இசட்6 5ஜி ஆனது 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 அடுக்கு திரவ குளிரூட்டும் தொழில்நுட்பம்
கூடுதலாக, ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி வரை ரேம் நீட்டிப்பு அம்சம் இருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனில் 5 அடுக்கு திரவ குளிரூட்டும் தொழில்நுட்பம் இடம்பெறும் எந கூறப்படுகிறது. ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போன் சமீபத்திய பெஞ்ச்மார்க் சோதனையில் 4,10,563 புள்ளிகளைப் பெற முடிந்தது என தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில், பேட்டரி மற்றும் கேமரா போன்ற அம்சங்கள் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. ஐக்யூ இசட்6 5ஜி ஸ்மார்ட்போனில் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் முதன்மை சென்சார் கொண்ட மேக்ரோ கேமராவை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வரும் என தகவல்
டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் கூற்றுப்படி, ஐக்யூ இசட்6 5ஜி இந்தியாவில் ரூ.15,000-க்கும் குறைவான விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை வரம்பில், ஐக்யூ இசட் 6 5ஜி ஸ்மார்ட்போன், ரியல்மி 9 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் 5ஜி போன்ற சாதனங்களுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் வெளியீடு உள்ளிட்ட விவரங்களை நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications