iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்? என்னவெல்லாம் இந்த போனில் எதிர்பார்க்கலாம்?

|

iQoo Z5 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. நிகழ்வை முன்னிட்டு இந்த போன் வெய்போவில் தொடர்ந்து டீஸ் செய்யப்பட்டு வருகிறது. இப்போது இந்த புதிய iQoo Z5 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. IQoo Z5 செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியச் சந்தையில் iQoo Z5 இன் விலை வரம்பையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்?

புதிய iQoo Z5 ஸ்மார்ட்போன்

சமீபத்திய வெளியீட்டு தகவல் மற்றும் அதன் ஆதாரங்கள் புதிய iQoo Z5 ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகம் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சொல்வது போல் உண்மையானால், புதிய iQoo Z5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் செப்டம்பர் 23 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

சீனாவில் அறிமுகமாகும் புதிய iQoo Z5 ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்குப் பின்னர் விரைவில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று இந்த தகவல் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் iQoo Z5 விலை ரூ.30,000 என்ற விலைப் புள்ளியின் கீழ் இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் வெறும் ரூ. 30,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் மாடலாக இது பார்க்கப்படுகிறது. இந்த விலை பிரிவின் கீழ் கிடைக்கும் சிறந்த செயல்திறன் மற்றும் கேமிங் அம்சம் கொண்ட சாதனம் இது என்று கூறப்பட்டுள்ளது.

iQoo Z5 இந்தியாவில் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்?

iQoo Z5 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்
இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo Z3 ஸ்மார்ட்போனில் வாரிசாக இந்த புதிய iQoo Z5 சாதனம் அறிமுகம் செய்யப்படுகிறது. IQoo Z5 இன் டீஸர்கள், இந்த ஸ்மார்ட் போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறுகிறது. இது iQoo Z3 க்குள் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 768G சிப்செட் உடன் ஒப்பிடுகையில் இது அதிலிருந்து மேம்படுத்தப்பட்டது. iQoo Z5 மேலும் LPDDR5 RAM உடன் வந்து UFS 3.1 சேமிப்பகத்தை வழங்குகிறது.

இந்த புதிய iQoo Z5 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10, 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் மற்றும் டிசிஐ-பி 3 கலர் வரம்பு ஆகியவற்றுடன் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் இடம்பெறும் என்று இந்த போன் டீசர் தகவல் பரிந்துரைக்கிறது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் ஆதரவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய டீசர் தகவல், iQoo Z5 ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும் என்று கூறியுள்ளது.

பேட்டரி பயன் மற்றும் சில விபரங்கள்

இது 96 மணிநேர இசை பின்னணி, 18.3 மணிநேர வீடியோ பிளேபேக் மற்றும் 10.4 மணிநேர கேமிங் ஆகியவற்றை வழங்குகிறது. சீனாவுக்கு வெளியே உள்ள சந்தைகளில் தொலைப்பேசியை வெளியிடுவது குறித்து நிறுவனம் எந்த அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது , நாங்கள் உங்களுடன் பகிர்ந்த தகவல்கள் அனைத்தும் டிப்ஸ்டர் மூலம் வெளியான அதிகம் எதிர்பார்க்கப்படும் தகவல்கள் என்பதைக் கவனிக்க மறக்க வேண்டாம். iQoo Z3 மற்றும் iQoo ஸ்மார்ட்போன் வரிசையில் உள்ள மற்ற மாடல்களின் விபரங்களை பற்றி அறிய எண்களின் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
iQoo Z5 Price Leaks And India Launch Tipped For September Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X