சைலண்டாக அறிமுகமான iQOO U5e: ரூ.15,000 க்கு 6ஜிபி ரேம், துல்லிய கேமிங் ஆதரவு- ஆனா ஒரு டுவிஸ்ட்!

|

ஐக்யூ நிறுவனம் படிப்படியாக ஸ்மார்ட்போன் அறிமுகங்களை அதிகரித்து வருகிறது. அதன்படி தற்போது ஐக்யூ நிறுவனம் iQOO U5e ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் எந்தவித ஆரவாரமின்றி சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?.

iQOO U5e ஸ்மார்ட்போன்

iQOO U5e ஸ்மார்ட்போன்

புதிய iQOO U5e ஸ்மார்ட்போனானது கேமிங் அம்சங்களுடன் இடைநிலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் iQOO U5e சாதனம் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. விலைக்கு ஏற்ற அம்சங்கள் இதில் இருக்கிறதா என்பது குறித்து பார்க்கலாம்.

iQOO U5e சிறப்பம்சங்கள்

iQOO U5e சிறப்பம்சங்கள்

iQOO U5e சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.51 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதன் எச்டி+ டிஸ்ப்ளே ஆனது வாட்டர் டிராப் கட்அவுட் அமைப்பைக் கொண்டுள்ளது. iQOO U5e ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் மற்றும் சிப்செட் குறித்து பார்க்கலாம்.

பின்புறத்தில் இரட்டை சென்சார் அமைப்பு

பின்புறத்தில் இரட்டை சென்சார் அமைப்பு

iQOO U5e ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை சென்சார் அமைப்பு இருக்கிறது. 13 எம்பி பிரைமரி ஷூட்டர் மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்போடு 8எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது. கேமராக்கள் ப்ரீமியம் மென்பொருட்களை கொண்டிருப்பதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமராக்கள் முழு எச்டி வீடியோ பதிவு திறனை கொண்டுள்ளது. சமீபத்திய ஆதரவுடன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்.

டைமன்சிட்டி 700 சிப்செட் ஆதரவு

டைமன்சிட்டி 700 சிப்செட் ஆதரவு

ஹூட்டின் கீழ் iQOO U5e ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 700 சிப்செட் ஆதரவை கொண்டிருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாதனம். இதன் மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். iQOO U5e ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 உடனான ஆர்ஜின் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. நீடித்த பேட்டரி ஆயுள் கொண்ட சாதனம் இது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

கூடுதலாக iQOO U5e ஸ்மார்ட்போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ், வைஃபை, 5ஜி இணைப்பு விருப்பங்களை இந்த சாதனம் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஆதரவு உள்ளது. சரி, இந்த ஸ்மார்ட்போனின் விலை என்னவென்று தெரியுமா?.

iQOO U5e விலை

iQOO U5e விலை

iQOO U5e விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. அது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகும். இதன் விலை குறித்து பார்க்கையில், iQOO U5e ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆனது CNY 1,399 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.16,000 ஆகும். அதேபோல் iQOO U5e ஸ்மார்ட்போனின் ஹை எண்ட் வேரியண்ட் ஆன 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் CNY 1,499 ஆக அறிமுகமாகி இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.18,000 ஆகும்.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

விவோ சீனா இணையதளத்தில் இந்த கேமிங் ஸ்மார்ட்போன் டார்க் பிளாக் மற்றும் சில்வர் ஒயிட் என்ற வண்ண விருப்பத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. கேமிங் அணுகலை முழுமையாகவும் துல்லியமாகவும் பெறுவதற்கு டைமன்சிட்டி 700 சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் iQOO U5e வெளியீடு குறித்த தகவலை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. அப்படி இந்தியாவில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் இதே பெயருடன் அறிமுகமாகும் என்பது சந்தேகம் தான்.

Best Mobiles in India

English summary
iQOO U5e Launched with Dimensity 700 Soc, 6GB RAM and More: India Launch Date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X