ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் ஐக்யூ யூ5: வெளியான விவரக்குறிப்புகள்!
ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன்
ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் சீனாவில் அமைதியாக வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் விவோ துணை பிராண்டான ஐக்யூ தொடரின் யூ-சீரிஸ் சாதனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் எனவும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்யூ யூ3 சாதனத்தின் வாரிசாக இருக்கும். சீன நிறுவனம் ஐக்யூ நியோ 5 எஸ் மற்றும் ஐக்யூ நியோ 5 எஸ்இ ஆகியவற்றை நாட்டில் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களில் இந்த தகவல் வெளியானது. ஐக்யூ யூ3 ஸ்மார்ட்போனின் வாரிசாக ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போன் வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி சிப்செட், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீத காட்சியுடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஐக்யூ யூ5 விலை, கிடைக்கும் தன்மை
ஜேடி.காம் தளத்தின் பட்டியலின்படி ஐக்யூ யூ5 சாதனமானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகிய வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஐக்யூ ஸ்மார்ட்போன்களின் விலையை நிறுவனம் வெளியிடவில்லை. ஜேடி.காம் மற்றும் சீனாவில் விவோ ஆன்லைன் ஸ்டோரில் டிசம்பர் 24 ஆம் தேதி இந்த சாதனம் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் வரும் என கூறப்படுகிறது. அது டார்க் பிளாக், மேஜிக் ப்ளூ மற்றும் சில்வர் ஒயிட் ஆகிய வண்ண விருப்பம் ஆகும். சில விவரங்களை வெளிப்படுத்திய ஆரம்ப முன்கூட்டிய ஆர்டர் டீஸருக்கு பிறகு முழுமையான விவரக்குறிப்புகளுடன் கூடிய பட்டியல் நேரலைக்கு வந்தது.

ஐக்யூ யூ5 விவரக்குறிப்புகள்
ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஐக்யூ யூ1 1.0 மூலம் இயங்குகிறது. இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஹூட்டின் கீழ் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இந்த ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு என ஐக்யூ யூ5 சாதனத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளேவில் உள்ள வாட்டர் டிராப் நாட்ச் வீடியோ அழைப்பு மற்றும் செல்பிகளுக்கு என 8 மெகாபிக்சல் கேமரா வசதி இருக்கிறது. ஐக்யூ யூ5 ஸ்மார்ட்போனானது 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. யூஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியோடு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உடன் இது வருகிறது.
File Images


Click it and Unblock the Notifications