மார்க்கெட்டே புரளப்போகுது.. 44 மணிநேர பிளேடைம்.. தெறிக்கவிடும் 3D சவுண்ட்.. AI நாய்ஸ் கேன்சல்.. என்ன மாடல்?
iQOO பிராண்ட் நேற்று நடத்திய அறிமுக நிகழ்வில், 2 புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல்கள், ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch), மற்றும் TWS இயர்பட்ஸ் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் வெளியான TWS இயற்ப்ட்ஸ் 44 மணிநேர பிளே நேரத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
iQOO அறிமுக நிகழ்வில் நிறுவனம் அதன் புதிய iQOO TWS 1e என்ற இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேட்டஸ்ட் வயர்லெஸ் இயர்பட்ஸ் (Latest Wireless Earbuds) சாதகமானது, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட iQOO TWS 1 மாடலின் வாட்டர்டு டவுன் செய்யப்பட்ட மாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய இயர்பட்ஸ் சாதனம் விவோ TWS 3e (Vivo TWS 3e) இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பு என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், iQOO வேரியண்ட் நிறம் சற்று மாற்றம் அடைந்துள்ளது. இது பிளாக் (Black) மற்றும் மஞ்சள் (Yellow) கலந்த நிறத்துடன் அற்புதமான லுக்கை கொண்டுள்ளது. இதன் ஸ்டாண்டர்ட் பதிப்பு (Standard edition) வெறும் வெள்ளை (White) நிறத்தில் வருகிறது.
iQOO TWS 1e சிறப்பம்சம் (iQOO TWS 1e Specifications):
இது ஆப்பிள் ஏர்பாட்ஸ் (Apple AirPods) போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் சாதனம் 11mm டிரைவர்களை (11mm Drivers) கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வெர்ஷனில் இயங்குகிறது. இது மல்டிபிள் சவுண்ட் எபக்ட் (multiple sound effects) உடன் டீப் எக்ஸ் 3.0 ஸ்டீரியோ (DeepX 3.0 stereo) ஆதரவு, 3D பனோராமிக் சவுண்ட் (3D panoramic audio) ஆதரவுடன் வருகிறது.
கேமிங்கான மான்ஸ்டர் சவுண்ட் அம்சம் (Monster Sound for gaming) போன்ற பல அட்டகாசமான அம்சங்களை இது பேக் செய்துள்ளது. இது IP54 ஸ்பிளாஷ் ப்ரூப் ரெசிஸ்டன்ஸ் (Splash Proof Resistance) பாதுகாப்புடன் வருகிறது. இது தரமான டச் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது. இந்த புதிய iQOO TWS 1e இயர்பட்ஸ் சாதனம் 55ms லோ-லேடன்சி (55ms low latency) ஆதரவுடன் வருகிறது.
இது இன்டெலிஜெண்ட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (intelligent ANC - active noise cancellation) அம்சத்துடன் வருகிறது. இது வாய்ஸ் கால்ஸ் மட்டுமின்றி உங்கள் மீடியா அனுபவத்தை மேம்படுத்தக்கூடிய AI நாய்ஸ் ரிடக்ஷன் (AI call noise reduction) அம்சத்துடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த iQOO TWS 1e இயர்பட்ஸ் சாதனம் 44 மணிநேர பிளேபேக் நேரத்தை சார்ஜிங் கேஸ் உடன் வழங்குகிறது என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
iQOO TWS 1e விலை (iQOO TWS 1e Price):
ஒவ்வொரு இயர்பட்ஸ் சாதனமும் சுமார் 11 மணிநேர பிளேபேக் (11 hour playback time) நேரத்தை சார்ஜிங் கேஸ் (Charging case) இல்லாமல் வழங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த iQOO TWS 1e இயர்பட்ஸ் சாதனம் 179 யுவான் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2000 ஆகும். அறிமுக சலுகையாக இவை ரூ.1800 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








