Home
News

iQOO வின் முதல் Smartwatch.. AMOLED டிஸ்பிளே.. 16 நாள் சார்ஜ்.. ப்ளூடூத் கால்லிங்.. SpO2 மானிட்டர்.. விலை என்ன

விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான iQoo பிராண்ட் அதன் முதல் iQoo ஸ்மார்ட்வாட்ச் (iQoo Smartwatch) சாதனத்தை வரும் டிசம்பர் 27ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதேநாளில், நிறுவனம் iQoo 9 நியோ (iQoo 9 Neo) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல, விவோவின் (Vivo) துணை நிறுவனமான iQoo பிராண்ட் ஒரே நாளில் ஒரு ஸ்மார்ட்போன் (Smartphone) சாதனம் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளன. இவை இரண்டும் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று iQoo அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

iQOO வின் முதல் Smartwatch.. AMOLED டிஸ்பிளே.. 16 நாள் சார்ஜ்..

iQoo ஸ்மார்ட்வாட்ச் (iQoo Smartwatch): iQoo நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் ரவுண்ட் டயல் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வருகிறது. இது விவோவின் கஸ்டம் பில்ட் ப்ளூ ஓஎஸ் (BlueOS) உடன் வெளிவரும் என்று லீக் தகவல் குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் பிளட் ஆக்சிஜன் சேச்சுரேஷன் மானிட்டர் (SpO2) அம்சம் போன்றவற்றை கொண்டிருக்கும்.

இந்த iQoo ஸ்மார்ட்வாட்ச் மீது ரசிகர்களின் கவனம் பதிந்ததற்கு மற்றொரு காரணம், இந்த ஸ்மார்ட்வாட்ச் சாதனம் 16 நாள் நீடிக்கும் பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆம், 16 நாள் பேட்டரி ஆயுளை இது வழங்குகிறது. இந்த ஆயுள் பயனர்கள் iQoo ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ப்ளூடூத் மோட்டில் இயக்கம் பொழுது கிடைக்கும் என்று நிறுவனம் தெளிவாக தெரிவித்துள்ளது.

iQoo ஸ்மார்ட்வாட்சில் இடம்பெற போகும் மற்ற முக்கியமான அம்சங்கள் பற்றியும் சில லீக் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இயங்குதளத்தை விவோ நிறுவனம் இதற்கு முன்பு அதன் விவோ வாட்ச் 3 (Vivo Watch 3) சாதனத்தில் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 10 வாட்ச் பேஸ் முகங்களை நிறுவனம் வழங்கி இருந்தது.

iQOO வின் முதல் Smartwatch.. AMOLED டிஸ்பிளே.. 16 நாள் சார்ஜ்..

இந்த iQoo ஸ்மார்ட்வாட்ச் தொடர்பான டீசர் போஸ்டரை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் iQoo ஸ்மார்ட்வாட்ச் சாதனம் பிளாக் ஸ்ட்ராப் (black strap) உடன் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பட்டன் உடன் காட்சியளிக்கிறது. இந்த பட்டன் UI நேவிகேஷன் அம்சத்தின் கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் கால்லிங் அம்சத்தையும் ஆதரிக்கும் என்பது தெரிகிறது.

eSIM சப்போர்ட் உடன் புது iQOO watch:

இது இசிம் இணைப்புடன் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. eSIM மோடில் இந்த iQoo ஸ்மார்ட்வாட்ச் 7 நாள் பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. வாய்ஸ் கால் அழைப்பு அம்சம் ஆக்டிவேட்டில் இல்லாமல் இருக்கும் போது, இது 16 நாள் ஆயுளை தருகிறது. இந்த iQoo ஸ்மார்ட்வாட்ச் சாதனம் சீனாவில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி 7 மணி அளவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

மற்றொரு லீக் தகவலின் படி, iQoo ஸ்மார்ட்வாட்ச் சாதனத்துடன் நிறுவனம் புதிய TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்யப்படும் என்று மற்றொரு லீக் தகவல் தெரிவித்துள்ளது. ஆக மொத்தம் iQoo பிராண்ட், வரும் டிசம்பர் 27 ஆம் தேதி ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், iQoo's 1e TWS இயர்பட்ஸ் என்று 3 சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Smartwatch with AMOLED Display 16 Days Battery Charge Bluetooth Calling and SpO2 Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X