Home
News

போடு வெடிய.. கேம் விளையாடினால் ரூ.10 லட்சம் சம்பளம்! iQOO நிறுவனம் அதிரடி! எப்படி அப்ளை செய்வது?

"என்னலாம் மொபைல் கேம் விளையாடுறதுல அடிச்சுக்கவே முடியாது" என்று சொல்பவரா நீங்கள், உங்களுக்கு ரூ. 10 லட்சம் சம்பளத்தில் தலைமை கேமிங் அதிகாரி (Chief Gaming Officer) பணியை வழங்க காத்திருக்கிறது, ஐக்யூ (iQOO) ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம். இப்படியொரு வேலைவாய்ப்பு அறிவிக்கப்படுவது, இதுவே முதல் முறையாகும்.

இந்த வேலைக்கு எப்படி அப்ளை செய்வது? வயது வரம்பு என்ன? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். "எப்ப பாரு கேம் (Game) விளையாடிட்டே இரு, சோத்துக்கே வழியில்லமா சுத்தப் போற" என்று நாள்தோறும் பெற்றோர்கள் தங்களது கேம் விளையாடும் பிள்ளைகளை கடிந்துகொள்வது இயல்பாகிவிட்டது.

போடு வெடிய.. கேம் விளையாடினால் ரூ.10 லட்சம் சம்பளம்! iQOO அறிவிப்பு!

இப்படி சொல்லும் அளவுக்கு, நாட்டில் மொபைல் கேம் (Mobile Game) பயன்பாடு பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதிகரித்துவிட்டது. இந்த கேம்களுக்கு அடிமையாகும் நிலைக்கும் பலர் தள்ளப்படுகின்றனர். இதனால், மத்திய, மாநில அரசுகள் மொபைல் கேம்களுக்கு என்றே பிரத்யேகமாக கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.

பொதுவாகவே அளவாக விளையாடினால் கேமிங் மிகவும் சிறப்பானது, மூளைக்கும், செயலாக்கத்துக்கும் மிகுந்த தீனி போடக் கூடியது. இதனை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. இதனாலேயே கேமிங் முழுமையாக தடை செய்யப்படுவது கிடையாது. இப்போது, மொபைல் போன் கேம்களின் வளர்ச்சி புதிய உச்சத்தை எட்டி வருவதால், அதுதொடர்பான வேலை வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.

ஆனால், அதற்கு படித்திருக்க வேண்டும், பணி அனுபவம் வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. ஆனால், முதல் முறையாக கேம் விளையாடுவதில் சிறந்து விளங்கினால் மட்டுமே போதும், ரூ. 10 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கப்படும் என்று ஐக்யூ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், கேமிங் பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த வேலைக்கு எப்படி அப்ளை செய்வது: ஐக்யூ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ (https://www.iqoo.com/in) வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அதன்பின் கம்யூனிட்டி (Community) என்னும் டேபை கிளிக் செய்ய வேண்டும். அப்போது உங்களுக்கு தலைமை கேமிங் அதிகாரி வேலைக்கான விளம்பரம் தோன்றும். அதில் "Know More" என்னும் டேப்பை கிளிக் செய்து திறக்கவும்.

இப்போது அந்த வேலைக்கான தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் உடன் விண்ணப்ப படிவங்களும் தோன்றும். இதற்காக, நீங்கள் இமெயிலை பயன்படுத்தி ஐக்யூ இணையதளத்துக்கென ஐடியை உருவாக்க வேண்டியிருக்கும். அதன்பின் அப்ளை செய்துகொள்ளலாம். நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்ளை செய்து கொள்ளலாம்.

தலைமை கேமிங் அதிகாரி வேலை விவரங்கள்: இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் 6 மாதம் மட்டுமே வேலையிருக்கும். இந்த வேலைக்கு எந்தவித பள்ளிப் படிப்போ, பட்டப் படிப்போ தேவையில்லை. ஐக்யூ போன்களில் புதிதாக கொண்டுவரப்படும் கேம்களை விளையாடி அதுதொடர்பான தகவல்களை நிறுவனத்திடம் வழங்கினால் மட்டுமே போதும்.

அதற்காக ரூ.10 லட்சம் சம்பளமாக வழங்கப்படும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Smartphone Company Offering Rs 10 lakh Salary For Chief Gaming Officer Role, Under 25 of Age Can Apply, Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X