Home
News

பட்ஜெட் அசுரன்.. LTPO AMOLED டிஸ்பிளே.. பவர்புல் போன் இன்று விற்பனை.. தெறிக்கவிடும் iQOO Neo 9 Pro 5G.. விலை?

நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro) ஸ்மார்ட்போனின் அறிமுகம் ஒருவழியாக இன்று நடந்துவிட்டது. ரூ.30,000 பட்ஜெட்டில் LTPO AMOLED டிஸ்பிளேவுடன் இது களமிறங்கி அசத்தியுள்ளது. இந்த போன் பற்றிய முழுவிபரம் இதோ.

iQOO Neo 9 Pro 5G: ஐகியூஓஓ (iQOO) பிராண்ட் இப்போது அதன் போர்ட்போலியோ வரிசையில், பட்ஜெட் விலையில் ஹை-பெர்ஃபார்மென்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டை நிறுவனம் இந்த புதிய ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro 5G) சாதனத்தை வைத்து முறியடிக்க பார்க்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் அசுரன்..  LTPO AMOLED டிஸ்பிளே.. பவர்புல் போன் இன்று விற்பனை..

டிஸ்பிளே: இந்த புதிய ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 6.78" இன்ச் 1.5K LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 3000 nits பீக் பிரைட்னஸ் உடன் 144Hz ரெஃப்ரஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது கிரிஸ்டல் கிளியர் வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. கேமிங்கிற்கான சிறந்த விஷுவல் அனுபவத்தையும் வழங்குகிறது.

சிப்செட்: இந்த ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் ரூ.35,000 விலை பிரிவில் வாங்க கிடைக்கும் சூப்பர் பெஸ்ட் பவர்புல் ஹை-பெர்பார்மென்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டுள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் சாதனமாகும்.

ஸ்டோரேஜ்: இந்த புதிய ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனம் 8GB ரேம் முதல் 12GB ரேம் வரை பெறுகிறது. இது 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 8GB + 8GB ரேம் மற்றும் 12GB + 12GB ரேம் வரை எக்ஸ்பேண்ட் செய்யும் திறனுடன் வருகிறது. இது உங்கள் ரேம் அனுபவத்தை சிறக்க செய்கிறது.

பட்ஜெட் அசுரன்..  LTPO AMOLED டிஸ்பிளே.. பவர்புல் போன் இன்று விற்பனை..

கேமிங் சிப்செட் Q1: கேமிங் அனுபவத்தை சிறப்படைய செய்ய இதில் சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் Q1 (Supercomputing Chip Q1) இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு டூயல் சிப் ஸ்மார்ட்போன் சாதனமாகும். இந்த ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ 5ஜி (iQOO Neo 9 Pro 5G) ஸ்மார்ட்போன் சாதனத்தின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இது பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் லெவல் கேமராவை வழங்குகிறது.

கேமரா: இது OIS உடன் 50MP Sony IMX920 நைட் விஷன் கேமராவை (night vision camera) கொண்டுள்ளது. இது இரவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பகல் நேரத்தில் 8K வீடியோ ரெக்கார்டிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது 2x போர்ட்ரெய்ட், லைவ் ஃபோட்டோ மற்றும் சூப்பர்மூன் மோட் உடன் 116 டிகிரி ஃபீல்ட் ஆங்கிளுடன் கூடிய 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவை கொண்ட டூயல் கேமராவை கொண்டுள்ளது.

பேட்டரி: இது 5160mAh உயர் செயல்திறன் கொண்ட பேட்டரியை (Battery) பேக் செய்கிறது. இந்த பேட்டரி வெறும் 11 நிமிடத்தில் 50% சார்ஜ்ஜை ஏற்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 120W பிளாஷ்சார்ஜிங் வேகத்தை கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) இல் இயங்குகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், ஆரம்ப சலுகையாக இது ரூ.37,999 விலையில் வாங்க கிடைக்கிறது.

விலை & விற்பனை: இது 8GB + 256GB ஸ்டோரேஜ் உடன் வரும் வேரியண்ட் மாடலின் விலையாகும். இதேபோல், 12GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ.5000 சலுகைக்கு பிறகு ரூ.39,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இது ஃபையரி ரெட் (Fiery Red) மற்றும் காண்குயரர் பிளாக் (Conqueror Black) நிறங்களில் இப்போது அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் வங்கி சலுகையாக ரூ.2000 கிடைக்கிறது. உடனே வாங்குங்கள்.

Best Mobiles in India

English summary
iQOO Neo 9 Pro 5G Launched In India Check Specifications and Price With Amazon India Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X