கேமிங் கிங்னு பெயரெடுத்த iQOO போனின் 1 டிபி வேரியண்ட் ரிலீஸ்.. எந்த மாடல்?
ஐக்யூ (iQOO) நிறுவனத்தின் ஆல்-ரவுண்டர் போனான ஐக்யூ நியோ 8 ப்ரோ (iQOO Neo 8 Pro) ஸ்மார்ட்போனின் 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் அறிமுகமாகியிருக்கிறது. இந்த போனின் விலை மற்றும் மற்ற அம்சங்களும் பின்னிப்பெடல் எடுக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஐக்யூ போன்களில் நியோ சீரிஸ் போன்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இதில் ஐக்யூ நியோ 8 ப்ரோ போன் கேமிங் பிரியர்களுக்கு ஏற்றவாறு, 1.5k ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் சிப்செட் என கடந்த மாதம் அதிரடியாக களமிறங்கியது. இந்த போன் விற்பனையில், சக்கைப்போடு போட்டதால், இப்போது 1 டிபி வேரியண்ட் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்யூ நியோ 8 ப்ரோ அம்சங்கள்: இந்த ஐக்யூ போன் 6.78 இன்ச் கர்வ்ட் (Curved) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 1.5k ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200Hz ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் கொண்டுள்ளது. இன் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் வருகிறது.
இந்த ஐக்யூ நியோ 8 ப்ரோ போனின் மெயின் கேமராவை பொறுத்தவரையில், சோனி ஐஎம்எர்ஸ்866V (Sony IMX866V) சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 50 எம்பி பிரைமரி கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகின்றன. 16 எம்பி செல்பீ கேமரா இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் ஓர்ஜின் 3.0 ஓஎஸ் (Origin OS 3.0) உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 9200 பிளஸ் எஸ்ஓசி (MediaTek Dimensity 9200+ SoC) சிப்செட் வருகிறது.
இந்த போன் முதலில் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளியானது. இப்போது, 16 ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் உடன் வெளியாகியிருக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போன் ரெட் (Red), மின்ட் (Mint), பிளாக் (Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போனின் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.43,000-க்கு கிடைக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 256 ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 38,800 ஆகவும், 16 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.42,300 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐக்யூ நியோ ப்ரோ போன் வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, 1 டிபி வேரியண்ட் வெளியானதால், மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








