Home
News

ஓபன்னா சொன்னா இப்படி ஒரு கெத்தான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்! iQoo Neo 8 ரெடி!

ரியல்மி (Realme), ஒன்பிளஸ் (OnePlus), ரெட்மி (Redmi) போன்ற ஸ்மார்ட்போன்களுடன் ரெடி போட்டியில் களமிறங்கி, தொம்சம் செய்து வரும் பிராண்ட் தான் iQoo ஆகும். iQoo என்ற இந்த பிராண்ட் விவோவிற்கு (Vivo) சொந்தமான துணை-பிராண்ட் ஆகும்.

சீனா ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான iQoo இப்போது 2 புதிய ஸ்மார்ட் போன் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற, மே 23 அன்று, iQoo Neo 8 தொடர் சீனாவில் அறிமுகமாகிறது. இந்த சீரிஸ் வரிசையில் iQoo Neo 8 மற்றும் iQoo Neo 8 Pro என்ற இரண்டு புது ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓபன்னா சொன்னா இப்படி ஒரு கெத்தான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்!

iQoo பிராண்டிங்கின் கீழ், ப்ரோ வெர்ஷன் மாடல் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். iQoo நியோ 8 தொடரில் முதல் முறையாக நிறுவனம் ப்ரோ மாடலை அறிமுகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய சில முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தும் ஒரு சுருக்கமான வீடியோவை iQoo நிறுவனம் Weibo தளத்தில் பகிர்ந்துள்ளது.

iQoo Neo 8 ஸ்மார்ட் போன் ஆனது சிவப்பு நிறத்தில் ஒரு வீகன் லெதர் பேனலைக் கொண்டுள்ளது. இது கார்பன் ஃபைபர் போன்ற வடிவங்களைக் கொண்ட பிளாக்-அவுட் கேமரா தொகுதியுடன் வருகிறது என்பதை வீடியோ பதிவு தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த iQoo நியோ 8 சாதனம் மூன்று கேமரா அமைப்புடன், வட்ட வடிவ கட்அவுட்களில் இரண்டு கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷை அடுத்ததாக மூன்றாவது சென்சாரை கொண்டுள்ளது.

இ ஸ்மார்ட் போனின் முதன்மை கேமரா சென்சார் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரிப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. iQoo எத்தனை MP கேமராவுடன் வரும் என்ற, கேமரா விவரக்குறிப்புகளை உறுதிப்படுத்தவில்லை. iQoo வழங்கும் நியோ 8 ப்ரோ ஒரு MediaTek Dimensity 9200+ SoC மற்றும் Vivo V1+ இமேஜ் சிக்னல் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் என நிறுவனம் உறுதி செய்துள்ளது. இருப்பினும், இதன் கேமரா விவரக்குறிப்புகள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஓபன்னா சொன்னா இப்படி ஒரு கெத்தான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்!

iQoo Neo 8 சாதனம் ஒரு 5G சாதனமாகும். இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் உடன் வெளியிடப்படும் என நிறுவனம் உறுதி செய்துள்ளது. மறுபுறம், iQoo Neo 8 Pro ஸ்மார்ட் போன் ஆனது 16GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் 6.78' இன்ச் கொண்ட பிளாட் AMOLED டிஸ்ப்ளேவை 1.5K தெளிவுத்திறனுடன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அதேபோல், இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் உயர் வீதத்தைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்பக்க கேமரா டிஸ்பிளேவின் மேல் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. பேட்டரி திறன் மற்றும் சார்ஜிங் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் இன்னும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. இரண்டு ஃபோன்களும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 3 அவுட்-ஆஃப்-பாக்ஸுடன் சீனாவில் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQoo Neo 8 and iQoo Neo 8 Pro Smartphone With Vegan Red Leather Panel Launching On May 23rd in China
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X