எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் iQOO Neo 7! விலை இதுதான்? சலுகை விவரம் இதோ!
ஐக்யூ நிறுவனம் விரைவில் இந்தியாவில் iQOO Neo 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது.
iQOO Neo 7
iQOO Neo 7, இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே சீனாவில் அறிமுகமான காரணத்தால் இதன் லுக் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் ஏறத்தாழ கணித்துவிட முடிகிறது. இந்த நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் வங்கி சலுகைகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்
iQOO Neo 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனாக வரும் என்பதும் இதன் இந்திய மாறுபாடு Mediatek Dimensity 8200 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் டிப்ஸ்டர் பராஸ் குக்லானி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
டிப்ஸ்டர் பராஸ் குக்லானியின் உபயம். கைபேசி பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரசாதமாக வரும் மற்றும் இந்திய மாறுபாடு Mediatek Dimensity 8200 மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
iQOO நியோ 7 விலை
iQOO நியோ 7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை குறித்து பார்க்கையில், இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.34,999 என நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதலாக குறிப்பிட்ட வங்கி கார்ட்களை பயன்படுத்தினால் ரூ.4000 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
சிறந்த செயல்திறன் கொண்ட சிப்செட்
புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவரும்.
64 எம்பி பிரைமரி கேமரா
புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்
iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








