அரண்டுபோன மார்க்கெட்.. முழுசா ரூ.2000 டிஸ்கவுண்ட்.. 64எம்பி கேமரா..120W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனம் தனது ஐக்யூ நியோ 7 5ஜி (iQoo Neo 7 5G) ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஐக்யூ நியோ 7 5ஜி போன் ஆனது டைமன்சிட்டி சிப்செட், 64எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ நியோ 7 5ஜி போன் முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட இந்த விலை குறைப்பின் மூலம் இந்த போனை ரூ.27,999-க்கு வாங்க முடியும். அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி கொண்ட வேரியண்ட் முன்பு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது அறிவிக்கப்பட்ட விலைகுறைப்பின் மூலம் இந்த வேரியண்டை ரூ31,999-க்கு வாங்க முடியும்.

இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஐக்யூ நியோ 7 5ஜி போனை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். அதேபோல் இன்டர்ஸ்டெல்லர் பிளாக் (Interstellar Black )மற்றும் ஃப்ரோஸ்ட் ப்ளூ (Frost ப்ளூ) நிறங்களில் இந்த ஐக்யூ நியோ 7 5ஜி போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.68-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சாம்சங் இ5 அமோலெட் (6.78-inch FHD+ Samsung E5 AMOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
ஆக்டோ-கோர் பவர்ஃபுல் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட் (octa-core powerful MediaTek Dimensity 8200) வசதியைக் கொண்டு இந்த ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனின் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் Funtouch OS 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.
ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். பின்பு ஐக்யூ நியோ 7 5ஜி ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இந்த போனில்உள்ளது. பின்பு 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் குறைந்த எடையுடன் இந்த போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








