Home
News

ஐக்யூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம்: டிரிபிள் கேமரா, அதீத கூலிங் பேக் வசதி- விலை இவ்வளவுதான்!

டிரிபிள் ரியர் கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி வசதியுடன் ஐக்யூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐக்யூ நியோ 6 சாதனமானது சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஐக்யூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம்

ஐக்யூ நியோ 6 இந்தியாவில் அறிமுகம்

ஐக்யூ நியோ 6 இன்று (மே 31) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நியோ ஸ்மார்ட்போன் போர்ட்ஃபோலியோவில் சமீபத்தில் ஒரு புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி உடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் உடன் வருகிறது. இந்த சாதனம் ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனமானது சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனத்தில் 64 எம்பி பிரதான கேமராவுடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உட்பட ஐக்யூ நியோ 6 சாதனத்தில் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவோடு 4700 எம்ஏஎச் பேட்டரி உடன் கிடைக்கும்.

இந்தியாவில் ஐக்யூ நியோ 6 விலை, கிடைக்கும் தன்மை

இந்தியாவில் ஐக்யூ நியோ 6 விலை, கிடைக்கும் தன்மை

இந்தியாவில் ஐக்யூ நியோ 6 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ஐக்யூ நியோ 6 சாதனமானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.33,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் ஆனது சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா வண்ண விருப்பங்களில் கிடைக்கும். இந்த சாதனம் மதியம் 1 மணிக்கு அமேசான் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் மூலமா வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அறிமுக சலுகைகள்

அறிமுக சலுகைகள்

வாடிக்கையாளர்கள் ஜூன் 5 வரை இந்த சாதனம் வாங்கும் பட்சத்தில் அறிமுக சலுகைகளை பெறலாம். இந்த சலுகையாக ரூ.3000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சாதனத்தை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வாங்கும்பட்சத்தில் ரூ.1000 அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது. நிறுவனம் ஐக்யூ நியோ 6 வெளியீட்டு நிகழ்வில் இரண்டு புதிய கேமிங் சார்ந்த பாகங்களை அறிவித்தது. ஐக்யூ கூலிங் பேக் கிளிப் ஒரு நிமிடத்திற்கு 15 டிகிரியை குறைப்பதாக கூறப்படுகிறது.

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஐக்யோ நியோ 6 சாதனமானது இரட்டை சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) இ4 அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. இது கேமிங்கின் போது மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மையாக்காக திரவ குளிரூட்டும் நீராவி அறையுடன் வருகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் வருகிறது.

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் கேமரா ஆதரவு

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் கேமரா ஆதரவு

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில் கேமரா ஆதரவுகளுக்கு என 64 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிடபிள்யூ1பி முதன்மை சென்சார், 8 எம்பி இரண்டாம் நிலை வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா உடன் வருகிறது. ஐக்யூ நியோ 6 சாதனத்தில் செல்பி மற்றும் வீடியோ கேமரா ஆதரவுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஐக்யூ நியோ 6 சாதனமானது 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
iQoo Neo 6 Smartphone Launched in India with Triple Rear camera, 12GB RAM: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X