ஒன் டைம் ஆஃபர்- அதிரடி தள்ளுபடியில் Iqoo Neo 6: விலைக்கேற்ற அம்சம் இருக்கா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று (ஜூன் 30) ரூ.28,999 என்ற ஆரம்ப விலையில் ஒன்பிளஸ் நோர்ட் 2டி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் iQOO Neo 6 க்கு போட்டியாக இருக்கும் என தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த ஐக்யூ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பல வாடிக்கையாளர்களின் கவனத்தை திசை திருப்பி இருக்கிறது.

தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்

தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்

iQOO Neo 6 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தள்ளுபடியானது ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை கிடைக்கும். Nord 2T 5ஜி ஆனது ரூ.28,999 என அறிமுகப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்டு iQOO Neo 6 சாதனமும் இந்த விலைப்பிரிவில் கிடைக்கிறது. அதன்படி iQOO Neo 6 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.26,999 என தற்போது கிடைக்கிறது.

அதீத பரிமாற்ற சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன்

அதீத பரிமாற்ற சலுகையுடன் இந்த ஸ்மார்ட்போன்

பெரும்பாலான ஆன்லைன் விற்பனை தளங்களில் இந்த தள்ளுபடி கிடைக்கிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாகஇந்த ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியாக ரூ.12,150 வரை வழங்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டுக்கும் இதே மாதரியான தள்ளுபடி கிடைக்கும்.

iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? iPhone வச்சிக்கிட்டு ஓவர்-சீன் போடுறாங்களா? "இதை" சொல்லுங்க.. அடங்கிடுவாங்க!

ஐக்யூ நியோ 6 விலை விவரங்கள்

ஐக்யூ நியோ 6 விலை விவரங்கள்

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,999 என இருந்தது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.33,999 ஆக இருக்கிறது. தற்போது இதன் அடிப்படை மாடலான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் தள்ளுபடியுடன் ரூ.26,999 என வாங்கலாம். அதேபோல்12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் சாதனத்தை தள்ளுபடியுடன் ரூ.30,999 என வாங்கலாம்.

சக்தி வாய்ந்த சிப்செட் வசதி

சக்தி வாய்ந்த சிப்செட் வசதி

சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.62 இன்ச் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 64 எம்பி பிரதான கேமராவுடனான டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு என பல்வேறு மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

இனி 6 மட்டும் இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) மற்றும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) இ4 அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் ரேட்டிங் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. கேம் விளையாடும் போது வெப்ப நிலையை சரி செய்ய திரவ குளிரூட்டும் நீராவி அறையை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது.

அனைத்து உயர்தர அம்சம்

அனைத்து உயர்தர அம்சம்

64 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிடபிள்யூ1பி முதன்மை சென்சார், 8 எம்பி இரண்டாம் நிலை வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ கேமரா ஆதரவுக்கு என 16 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போனில் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Iqoo Neo 6 Available at Discount Price in India: Right time to buy best Midrange Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X