Home
News

ஒரே நேரத்தில் 9 iQOO போன்கள் மீது வெயிட்டான டிஸ்கவுண்ட்.. இலவச Earbuds வேற.. ஜூன் 13 வரை!

ஐக்யூ நிறுவனம், இந்தியாவில் அதன் ஐந்தாண்டு நிறைவை முன்னிட்டு ஒரு சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஐக்யூ அனிவர்சரி சேல் 2025 (iQOO Anniversary sale 2025) என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையில் பல வகையான (பட்ஜெட், மிட்-ரேன்ஜ் மற்றும் பிரீமியம் வரை) ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன.

இந்த விற்பனை வருகிற ஜூன் 13 ஆம் தேதி அன்று முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஐக்யூ ஸ்மார்ட்போன்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடிகளை பெற அமேசான் இந்தியா அல்லது ஐக்யூ இ-ஸ்டோரை அணுகலாம். என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது? இதோ விவரங்கள்:

ஒரே நேரத்தில் 9 iQOO போன்கள் மீது வெயிட்டான டிஸ்கவுண்ட்!

பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: ஐசிஐசிஐ பேங்க் கார்டு வழியாக ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2,000 உடனடி வங்கி தள்ளுபடிகிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள. இதன்மூலம் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட்-ஐ ரூ.20,000 க்கும் குறைவான விலையில் வாங்கலாம்.

நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,998 க்கு அறிமுகமானது. இதேபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,998 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.25,998 க்கு அறிமுகமானது

ஒருவேளை நீங்கள் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G) ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், தற்போது இது ரூ.12,749 என்கிற விலையில் வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x) ஸ்மார்ட்போனை ஆனது தற்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. (பட்ஜெட் பிரிவில் கடைசியாக) ஐக்யூ இஸட்9 லைட் (iQOO Z9 Lite) மாடல் ஆனது ரூ.750 தள்ளுபடியுடன் ரூ.9,749 க்கு வாங்க கிடைக்கிறது.

மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) ஸ்மார்ட்போன் ரூ.2,000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. தற்போது இதன் விலை ரூ.29,999 ஆக உள்ளது. இதேபோல ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R) ரூ.2,500 தள்ளுபடிக்கு பிறகு ரூ.24,499 க்கு வாங்க கிடைக்கிறது. ஐக்யூ இஸட்9எஸ் (iQOO Z9s) ஸ்மார்ட்போன் ரூ.1,500 தள்ளுபடிக்கு பிறகு தற்போது ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது.

பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: இந்த விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போனை மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.44,999 க்கு கிடைக்கிறது.அதாவது இதன் விலை ரூ.6,000 குறைக்கப்பட்டுள்ளது

கடைசியாக ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ.2,000 தள்ளுபடிகிடைக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ரூ.1,899 மதிப்புள்ள ஐக்யூ டிடபுள்யூஎஸ் 1இ (iQOO TWS 1e) இயர்பட்ஸை முற்றிலும் இலவசமாக பெறலாம்.

ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 20:9 ஆப்ஸ்பெக்ட் ரேஷியோ ஸ்க்ரீன், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, 144 ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78 இன்ச் குவாட் எச்டி பிளஸ் கர்வ்டு பிஓஇ க்யூ10 எல்டிபிஓ அமோஎல்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் இடம்பெறும் அதே ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை (Octa Core Snapdragon 8 Elite SoC) கொண்டுள்ளது. ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 256ஜிபி / 512ஜிபி யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி / 16ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இது 1/ 1.49-இன்ச் சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார், எப்/1.88 அபெர்க்ஷர், ஓஜஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 150° அல்ட்ரா-வைட்-ஆங்கிள், எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 50எம்பி கேமரா + 119.4° டிகிரி, எப்/1.8-இன்ச் ஐஎம்எக்ஸ்816 சென்சார், ஓஐஎஸ், 4எக்ஸ் லாஸ்லெஸ் ஜூம் உடனான 50எம்பி டெலிஃபோட்டோ கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 120W அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் உடனான 6150mAh பேட்டரியை கொண்டுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Anniversary Sale 2025 Discounts on Budget Mid Range Premium iQOO Smartphones Until June 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X