முக்கிய புள்ளிகளுடன் மோத தயாரான iQoo: ஆகஸ்ட் 2 நடக்கவிருக்கும் சம்பவம்!

|

iQoo 9T 5G ஸ்மார்ட்போனானது ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல், இதன் விலை என்னவாக இருக்கும் என விரிவாக பார்க்கலாம்.

எதிர்பாராத வகையிலான புது ஸ்மார்ட்போன்

எதிர்பாராத வகையிலான புது ஸ்மார்ட்போன்

ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் எதிர்பாராத வகையிலான புது ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ஐபோனுக்கு இணையாக இருக்கும் என்ற தகவல் கவனிக்கத்தக்க ஒன்று. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது சமீபத்திய Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடக்க இருக்கும் சம்பவம்

ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடக்க இருக்கும் சம்பவம்

ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 9டி 5ஜி ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போதே அமேசான் தளத்தில் பிரத்யேகமாக பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த வெளியீட்டு தேதி ஐக்யூ நிறுவனம் ட்வீட்டில் மூலம் உறுதிப்படுத்தி பின் அதை நீக்கியது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து நிறுவனம் மீண்டும் ட்வீட் செய்தது ஆனால் இந்த முறை வெளியீட்டு தேதியை தெரிவிக்கவில்லை. நிறுவனம் இந்த ட்வீட்டில் என்ன தெரிவித்தது?

1.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்

1.1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்பெண்

தகவலின்படி, iQoo 9T 5G ஆனது 1.1 மில்லியனுக்கும் அதிகமான AnTuTu மதிப்பெண்ணை பெற்றிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டிருக்கும் எனவும் இது AnTuTu Benchmark பதிப்பு 9.4.1 இல் சோதிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பட்டியலில் வெளியான தகவல்

அமேசான் பட்டியலில் வெளியான தகவலின்படி, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 9டி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அமேசான் மற்றும் ஐக்யூ இன் இ-ஸ்டோர் மூலமாக அறிமுகப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான தகவலின்படி, ஐக்யூ 9டி 5ஜி ஆனது 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

iQoo 9T 5G இந்திய விலை என்ன?

iQoo 9T 5G இந்திய விலை என்ன?

iQoo 9T 5G இந்திய விலை என்னவாக இருக்கும் என பார்க்கையில், iQoo 9T 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.55,000 விலை பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த iQoo 9T 5G ஆனது ஆல்போ மற்றும் லெஜண்ட் வண்ண விருப்பங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iQoo 9T 5G சிறப்பம்சங்கள்

iQoo 9T 5G சிறப்பம்சங்கள்

iQoo 9T 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், iQoo 9T 5G ஆனது முன்னதாகவே குறிப்பிட்டப்படி அமேசான் தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

V1+ இமேஜிங் சிப் உடனான கேமரா வசதி

V1+ இமேஜிங் சிப் உடனான கேமரா வசதி

இந்த ஸ்மார்ட்போனானது 40எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆதரவு கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் V1+ இமேஜிங் சிப் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடனான சாம்சங் இ5 அமோலெட் டிஸ்ப்ளே இடம்பெற்றிருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் 120 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதி இருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

போட்டியை ஏற்படுத்துமா இந்த ஸ்மார்ட்போன்?

போட்டியை ஏற்படுத்துமா இந்த ஸ்மார்ட்போன்?

ஐக்யூ நிறுவனம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கும் iQoo 9T 5G ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் தகவல் அறிமுகத்தன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும். ஐபோன், ஒன்பிளஸ், சாம்சங் போன்ற ஸ்மார்ட்போன்கள் போட்டியிடும் விலைப் பிரிவில் ஐக்யூ அறிமுகம் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் எந்த அளவு போட்டியை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

முதல் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்

முதல் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போன்

ஐக்யூ நிறுவனம் உலகின் முதல் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது ஐக்யூ 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாகும். ஐக்யூ 10 சீரிஸ் இல் ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ இடம்பெற்றுள்ளது. ஐக்யூ 10 ப்ரோ மாடலில் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்மார்ட்போனை வெறும் 12 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும்.

50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா

50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா

ஐக்யூ 10 ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட், எச்டிஆர் ஆதரவுடன் கூடிய 6.78 இன்ச் முழு எச்டி+ இ5 அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஸனாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 50 எம்பி + 13 எம்பி + 12 எம்பி என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இதில் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

00 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ப்ரோ மாடல்

00 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ப்ரோ மாடல்

ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் டிஸ்ப்ளே உடன் 2கே இ5 அமோலெட் எல்டிபிஓ 3.0 டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இரட்டை 50 எம்பி கேமரா மற்றும் 14.6 எம்பி 3 எக்ஸ் போர்ட்ரெய்ட் சென்சார் உடன் V1+ சிப் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா இருக்கிறது. இதில் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Iqoo 9T 5G Smartphone Set to Launching on August 2: Expected price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X