வருது வருது விலகு விலகு: ஐக்யூ 9, 9 ப்ரோ உடன் ஐக்யூ 9 எஸ்இ- கிம்பல் கேமரா, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே!
ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தை ஐக்யூ 9 தொடரின் கீழ் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த பிராண்ட் இந்த சாதனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஐக்யூ கடந்த மாதம் பிஜிஎம்ஐ நிகழ்வில் போது வரவிருக்கும் ஐக்யூ 9 தொடரின் வெளியீட்டை டீஸ் செய்தது. அதேபோல் இந்த சாதனம் மைக்ரோசைட் தளத்தின் நேரலை மூலம் முக்கிய அம்சங்களை வெளிப்படுத்தியது.

ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ
சீன ஸ்மார்ட்போன்களுடன் இந்திய மாறுபாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது அதேபோல் பல்வேறு அம்சங்களை வழங்குகின்றன. ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ உடன் இணைந்து ஐக்யூ 9 எஸ்இ சாதனத்தின் மற்றொரு மாடலை நாட்டில் கொண்டு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியீடு குறித்து பார்க்கையில் ஐக்யூ 9 தொடரின் கீழ் ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ மற்றும் ஐக்யூ 9 எஸ்இ சாதனங்கள் என மூன்று மாடல்கள் இடம்பெறும் என யூடியூபர் டெக்னிக்கல் குருஜி சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ஐக்யூ 9 எஸ்இ எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
ஐக்யூ 9 எஸ்இ ஆனது ஐக்யூ 9 தொடரின் மிகவும் மலிவு விலை சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். இந்த ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவற்றை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. ஐக்யூ 9 எஸ்இ ஆனது விலை சுமார் ரூ.35,000 விலைப் பிரிவில் வரும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐக்யூ 9, 9 ப்ரோ அம்சங்கள்
இந்தியாவில் ஐக்யூ 9 மற்றும் 9 ப்ரோ ஆகிய இரண்டின் அம்சங்களையும் யூடியூபர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சாதனங்கள் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் ஐக்யூ 9 ஆனது 888 ப்ளஸ் சிப் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. ஐக்யூ 9 சாதனத்தின் சீன மாறுபாடானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் காட்சியை பொறுத்தவரை 6.78 இன்ச் க்யூ எச்டி ப்ளஸ் வளைந்த இ5 அமோலெட் டிஸ்ப்ளே உடன் வரும் என கூறப்படுகிறது. ஐக்யூ 9 ஆனது 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் பேனலை கொண்டிருக்கும். இரண்டு சாதனங்களும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் இன்- டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ்
இமேஜிங் ஆதரவுக்கு என ஐக்யூ 9 ப்ரோ ஆனது 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 பிரதான லென்ஸ், 50 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 16 எம்பி சென்சார் ஆகியவற்றோடு வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு இருக்கும் என கூறப்படுகிறது. முதன்மை கேமராவும் கிம்பல் ஸ்டெபிலைசேஷன் ஆதரவோடு வரும் என தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் ஐக்யூ 9 ஆனது கிம்பல் உறுதிப்படுத்தல் உடன் 48 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 120 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications