Home
News

iQOO 9 இந்தியாவில் அறிமுகமா? iQOO 8 மற்றும் iQOO 8 ப்ரோ அறிமுகமே இன்னும் உறுதியாகவில்லையே?

iQOO நிறுவனம் சமீபத்தில் அதன் iQOO ஸ்மார்ட்போன் வரிசையில் iQOO 8 மற்றும் iQOO 8 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த iQOO 8 மற்றும் iQOO 8 ப்ரோ ஆகிய இரண்டு சாதனங்களும் இந்தியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை. இருப்பினும், இப்போது ​​iQOO பிராண்ட் வரவிருக்கும் நாட்களில் iQOO 9 தொடரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மாடல் எண் I2022 உடன் iQOO 9 ப்ரோவின் இந்திய மாறுபாடு IMEI சான்றிதழில் காணப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அறிமுகத்திற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாதிரி எண் இந்தியாவில்

iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாதிரி எண் இந்தியாவில்

IMEI சான்றிதழ் iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் மாதிரி எண் விபரத்தைக் குறிப்பிடுவதைத் தவிர வரவிருக்கும் iQOO 9 ப்ரோ பற்றிய எந்த விவரங்களையும் பகிரவில்லை. வெளியீட்டைப் பொறுத்தவரை, iQOO வழக்கமாக ஆறு முதல் ஏழு மாதங்களுக்குப் பிறகு அதன் முதன்மை வரிசையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் அடுத்த தலைமுறை iQOO 9 தொடர் 2022 இன் ஆரம்பத்தில் வெளிச்சத்தைக் காணும் என்று கூறப்படுகிறது.

iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்?

iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலில் எதை எல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் இந்த புதிய iQOO 9 ப்ரோ ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களுடன் வெளியாகும் என்ற கேள்வி நிச்சயமாக உங்களிடம் எழுந்திருக்கும். தற்போதைய நேரத்தில் வரவிருக்கும் iQOO 9 ப்ரோவின் முக்கிய விவரக்குறிப்புகள் குறித்து எந்த தகவலையும் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் மற்ற சான்றிதழ் தளங்களுக்குச் சென்று மேலும் விவரங்களை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறது. IQOO 9 ப்ரோ மாடல் நிச்சயமாக iQOO 8 Pro ஐ விட மேம்படுத்தல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

iQOO 8 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

iQOO 8 Pro ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

தெரியாதவர்களுக்கு, iQOO 8 Pro ஸ்மார்ட்போன் சாதனம் 6.78' இன்ச் கொண்ட அமோலேட் டிஸ்ப்ளேவை 2K 1440 x 3200 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் கொண்டுள்ளது. IQOO 8 ப்ரோ ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப்செட் மூலம் 12 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 512 ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 4,500 mAh பேட்டரி 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் ஆதரிக்கப்படுகிறது.

ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வெளிவருமா?

ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வெளிவருமா?

கேமரா அம்சத்தை பற்றி பார்க்கையில் இந்த iQOO 8 ப்ரோ ஸ்மார்ட்போன், 50 எம்பி ஐஎம்எக்ஸ் 766 வி சென்சார், ஜிம்பல் ஸ்டேபிலைசேஷன் சப்போர்ட், 48 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 16 எம்பி கேமரா சென்சார் கொண்ட மூன்று கேமரா கொண்ட ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வருகிறது. இது 16 எம்பி முன் கேமரா சென்சார் உடன் வருகிறது. மற்ற அம்சங்களை பொறுத்த வரியில் இது, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் அனைத்து முக்கிய இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது.

iQOO 8 சீரிஸ் இந்தியா வெளியீடு எப்போது எதிர்பார்க்கப்படுகிறது?

iQOO 8 சீரிஸ் இந்தியா வெளியீடு எப்போது எதிர்பார்க்கப்படுகிறது?

சமீபத்திய தகவல் படி, iQOO பிராண்ட் இப்போது இந்தியாவில் iQOO 8 தொடரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. iQOO 8 மற்றும் iQOO 8 Pro உள்ளிட்ட iQOO 8 தொடர் இந்த மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. பிந்தையது இந்தியாவில் iQOO 8 லெஜண்ட் மோனிகரின் கீழ் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இருப்பினும், பிராண்ட் இந்தியாவில் iQOO 8 தொடரின் தொடக்கத்தை உறுதிப்படுத்தவில்லை என்பதனால் நாம் காத்திருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
iQOO 9 Pro Launching Soon In India New Variant Spotted On IMEI Certification : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X