Home
News

எல்லாமே 120., வேறலெவல் வேகத்துடன் சார்ஜிங்: இந்தியாவுக்கு வரும் ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ- காத்திருந்து வாங்கலாம்!

ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் விவரக்குறிப்புகள் அதன் அறிமுகத்திற்கு முன்னதாக ஆன்லைனில் கசிந்துள்ளன. ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் இந்திய மாறுபாடு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் பேக் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இந்த சாதனங்கள் இந்தியா உட்பட பிற உலக சந்தைகளுக்கு விரைவில் வர இருக்கின்றன. ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 ப்ரோ ஆகிய இரண்டும் இந்திய வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது வெவ்வேறு விவரக்குறிப்புகளை கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக புதிய ஐக்யூ 9 சீரிஸ் போன்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸ் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் மூன்று பின்புற கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதி

ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ப்ரோ மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி-ஐக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 9 சாதனத்தின் இந்திய மாறுபாடு 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 9 விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 விவரக்குறிப்புகள் குறித்து எதிர்பார்க்கப்படும் தகவல்களை பார்க்கலாம், இதுகுறித்து டிப்ஸ்டர் உத்சவ் டெக்கி தெரிவித்த தகவலை பார்க்கையில், வெண்ணிலா ஐக்யூ 9 ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை டுவிட் செய்துள்ளார். டிப்ஸ்டர் தகவலின்படி, ஐக்யூ 9 ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடானது ஆண்ட்ராய்டு 12 அவுட் ஆஃப் பாக்ஸில் இயங்கும் எனவும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் அமோலெட் 10-பிட் டிஸ்ப்ளே உடன் வரும் எனவும் ஐக்யூ 9 ஆனது ஸ்னாப்டிராகன் 888+ செயலி மூலம் இயங்கும் எனவும் கூறப்படுகிறது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

48 மெகாபிக்சல் பிரதான கேமரா

ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் 13 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் ஷூட்டர் வசதியை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஐக்யூ 9 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த தகவலை டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் தெரிவித்துள்ளார். ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் விவரக்குறிப்புகளை தனித்தனியாக டுவிட் செய்துள்ளார். கசிவுத் தகவலின்படி, ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 6.7 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. சீனாவில் வெளியிடப்பட்ட மாடலை போன்றே இந்திய மாறுபாடும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி உடன் வரும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ 9 ஸ்மார்ட்போனானது இரண்டு ரேம் வசதி மற்றும் இரண்டு உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

120 வாட்ஸ் சார்ஜிங் வசதி

120 வாட்ஸ் சார்ஜிங் வசதி

இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் இது 50 மெகாபிக்சல் பிரதான கேமரா, டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் அல்ட்ரா வைட் சென்சார் ஆகியவையுடன் வரும் என கூறப்படுகிறது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கென 16 மெகாபிக்சல் ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4700 எம்ஏஎச் பேட்டரி உட்பட 120 வாட்ஸ் சார்ஜிங் வசதியைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Iqoo 9, Iqoo 9 Pro Might Launching Soon in India With 120Hz display, 120W Fast Charging and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X