Home
News

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ 9, ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 எஸ்இ அறிமுகம்: 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 12ஜிபி ரேம்!

ஐக்யூ 9 தொடரின் வெண்ணிலா மாடல் 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 10 பிட் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 320 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹீட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதியோடு 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 எஸ்இ

ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 எஸ்இ

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூ இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்யூ 9 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9 மற்றும் ஐக்யூ 9 எஸ்இ மாடல்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று சாதனங்களும் குவால்காம்-ன் சமீபத்திய சிப்செட்களை கொண்டிருக்கின்றன. ஐக்யூ 9 ப்ரோ என்பது சமீபத்திய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 உடன் வரும் எனவும் இது தொடரின் ப்ரீமியம் மாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ தொடரின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

ஐக்யூ9 சாதனத்துக்கான விவரக்குறிப்புகள்

ஐக்யூ9 சாதனத்துக்கான விவரக்குறிப்புகள்

ஐக்யூ9 சாதனத்துக்கான விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த தொடரின் வெண்ணிலா மாடல் 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் 10 பிட் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீத ஆதரவோடு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதியோடு 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஐக்யூ 9 சாதனத்தின் கேமரா அம்சங்கள்

ஐக்யூ 9 சாதனத்தின் கேமரா அம்சங்கள்

ஐக்யூ 9 சாதனத்தின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதன் முன்புறத்தில் 48 எம்பி பிரதான கேமரா உட்பட மூன்று பின்புற கேமராவை கொண்டிருக்கிறது. இது 13 எம்பி வைட் ஆங்கிள் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 13 எம்பி போர்ட்ரெய்ட் ஷூட்டர் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி ஷூட்டர் உடன் வருகிறது. ஐக்யூ 9 தொடர் ஆனது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனமானது 4350 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவோடு வருகிறது.

ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 ப்ரோ சாதனத்தின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் மாடல் சாதனமாக இருக்கிறது. இந்த ஐக்யூ 9 ப்ரோ சாதனமானது 6.78 இன்ச் 2கே இ5 அமோலெட் டிஸ்ப்ளே உடன் 3டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அம்சத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் காட்சி எல்டிபிஓ 2.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென்1 எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மாடல்

ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மாடல்

ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மாடலை பொறுத்த வரை, இது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி சாம்சங் ஐசோசெல் ஜிஎன்5 முதன்மை கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது. அதேபோல் 50 எம்பி 150 டிகிரி ஃபிஷ்ஐ வைட் ஆங்கிள் லென்ஸ் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மூன்றாம் நிலை கேமராவாக 16 எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவையைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி ஷூட்டர் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஆதரவோடு ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரைவக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4700 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனானது 3டி அல்ட்ரா சோனிக் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது.

ஐக்யூ 9 எஸ்இ விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 எஸ்இ விவரக்குறிப்புகள்

ஐக்யூ 9 எஸ்இ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போனானது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 300 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்ததுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. ஐக்யூ 9 எஸ்இ ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி வைட் மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி மோனோக்ரோம் சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 66 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது ஃபன்டச் ஓஎஸ்12 உடனான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 9 தொடரின் விலை விவரங்கள்

ஐக்யூ 9 தொடரின் விலை விவரங்கள்

ஐக்யூ 9 தொடரின் விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், ஐக்யூ 9 ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வேரியண்ட்களில் வருகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,990 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.46,990 ஆகவும் இருக்கிறது. ஐக்யூ 9 பிராண்ட் ஆனது ஆல்பா மற்றும் லெஜண்ட் வண்ண பதிப்புகளில் வரும். ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.64,990 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டார்க் க்ரூஸ் மற்றும் லெஜண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இறுதியாக கிடைக்கும் ஐக்யூ 9 எஸ் ஆனது 8 ஜிபி ரேம் மற்றும் 128 உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் விலை ரூ.33,990 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.37,990 ஆக இருக்கிறது. ஐக்யூ 9 எஸ்இ ஆனது ஸ்பேஸ் ஃப்யூஷன் மற்றும் சன்செட் சைர்ரா வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
iQOO 9, iQOO 9 Pro, iQoo 9 SE Smartphone Launched in India With 120Hz display, 12GB RAM, 66W Fast Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X