Just In
Don't Miss
- Sports
மூத்த வீரர் இப்படி பண்ணலாமா? களத்தில் ரோஹித் சர்மா ஆடிய விதம்.. தொடரும் கேள்விகள்.. ஷாக்கிங்!
- Lifestyle
இந்த 5 காய்கறிகள் உங்க உடல் எடையை குறைப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்குமாம்...!
- News
முட்டி மோதிய பிரபு, ரவிக்குமார்.. இருவருக்கும் "ஓகே" சொன்ன சித்தாள்.. கடைசியில் நடந்த "அந்த" சம்பவம்
- Movies
வீட்டின் அருகில் இருந்த வழிபாட்டு தலத்தை இடித்தாரா? நடிகர் விமல் மீது போலீசில் பரபரப்பு புகார்
- Automobiles
ஸ்டைலு அள்ளுதே... டிவிஎஸ் எக்ஸ்எல்100-இன் புதிய வின்னர் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பின்புறத்தில் மூன்று கோடு: ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி உடன் iQoo 7 ஸ்மார்ட்போன்- விலை என்ன தெரியுமா?
iQoo 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்களை பார்க்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன்
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமராக்கள், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 120வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஐக்யூ 7 ஸ்மார்ட்போனில் பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் போர்ட் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் மூன்று வண்ண கோடுகள் உள்ளன.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் விலை
ஐக்யூ 7 விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை CNY 3,798 அதாவது இந்திய மதிப்புப்படி ரூ.43,100 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதியின் விலை CNY 4,198 இந்திய மதிப்புப்படி ரூ.47,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லேட் ப்ளூ மற்றும் லெஜண்டரி எடிஷன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஜனவரி 15 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உலக சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை அணுகல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
ஐக்யூ 7 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஐக்யூ 7 இணைப்பு ஆதரவுகள்
ஐக்யூ 7 இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 5ஜி ஆதரவு, வைஃபை 6, யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்டவைகள் உள்ளன. பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190