இதோ இந்த டிசம்பருக்குள்- ஐக்யூ வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: வந்தது ஆண்ட்ராய்டு 12 அப்டேட்!
ஐக்யூ 7, ஐக்யூ 7 லெஜண்ட், ஐக்யூ இசட் 3, ஐக்யூ இசட் 5 மற்றும் ஐக்யூ 3 ஆகிய ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 பீட்டா உடன் இந்த டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய பீட்டா வெளியீடு சமீபத்திய ஆண்ட்ராய்டு அனுபவத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஐக்யூ நிறுவனத்தை போன்றே, பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமான ஒப்போ மற்றும் ரியல்மி உள்ளிட்ட பிற நிறுவனங்களும் ஆண்டராய்டு 12-ஐ இந்த ஆண்டின் பிற்பகுதியில் தங்கள் சாதனங்களில் கொண்டு வரும் என கூறப்படுகிறது.

ஐக்யூ 7, ஐக்யூ 7 லெஜண்ட், ஐக்யூ இசட் 3
இதுகுறித்து வெளியான தகவலின்படி, ஐக்யூ 7, ஐக்யூ 7 லெஜண்ட், ஐக்யூ இசட் 3 மற்றும் ஐக்யூ இசட்5 சாதனங்களானது ஆண்ட்ராய்டு 12 பீட்டா பதிப்பை டிசம்பர் இறுதியில் கொண்டு வரும் என கூறப்படுகிறது. ஐக்யூ 3 புதிய ஆண்ட்ராய்டு பதிப்பான அதன் பீட்டா நிலையை 2022 மார்ச் இறுதிக்குள் பெறும் என கூறப்படுகிறது. புதிய பீட்டா வெளியீடு என்ன அம்சங்களை கொண்டு வரும் என்பதை ஐக்யூ தற்போது வரை வெளிப்படுத்தவில்லை. சில தனிப்பயன் மாற்றங்களுடனான குறிப்பிட்ட அம்சங்களை ஆண்ட்ராய்டு 12 கொண்டு வரும் என கூறப்படுகிறது.

ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ்
ஆசஸ் தனது ஜென்ஃபோன் 8 மற்றும் ஜென்ஃபோன் 8 ஃபிளிப்-க்கான நிலையான ஆண்ட்ராய்டு 12 வெளியீட்டை டிசம்பர் மாதம் முதல் கொண்டு வரும் என அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் புதிய ஆண்ட்ராய்டு புதுப்பிப்பை கொண்டு வர நிறுவனம் தயாராகி வருகிறது. ஆண்டின் முதல் பாதியில் ஜென்ஃபோன் 7 மற்றும் ஆர்ஓஜி போன் 3 ஆண்ட்ராய்டு 12 புதுப்பிப்பை பெறும் என கூறப்படுகிறது. ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 மற்றும் ஆர்ஓஜி போன் 5எஸ் ஆண்ட்ராய்டு 12 இந்திய வெளியீடு விவரங்கள் தற்போது அறிவிக்கப்படவில்லை என கூறுகிறது. இந்த வார தொடக்கத்தில் கூகுள் தனது பிக்சல் போன்களுக்கான ஆண்ட்ராய்டு 12 பதிப்பை வெளியிட்டது.

ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி
iQoo 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரங்களை பார்க்கலாம்.

டிரிபிள் ரியர் கேமராக்கள், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே
ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலியுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமராக்கள், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 120வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஐக்யூ 7 ஸ்மார்ட்போனில் பிஎம்டபிள்யூ மோட்டார்ஸ் போர்ட் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறத்தில் மூன்று வண்ண கோடுகள் உள்ளன. ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது இரட்டை நானோ சிம் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 இயக்க முறை அணுகல் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 7 கேமரா அம்சங்கள்
ஐக்யூ 7 கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

50 எம்பி பிரதான பின்புற கேமரா
ஐக்யூ இசட்5 என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனமானது புதிய ஸ்னாப்டிராகன் 778ஜி மூலம் இயங்கும் கேமிங் ஸ்மார்ட்போனாக இருந்தது. விரைவில் கசிவுகள் தகவலின்படி இசட் 5எக்ஸ் எனப்படும் வரிசையில் மற்றொரு மாறுபாட்டை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஐக்யூ இசட்5 எக்ஸ் என்பது 50 எம்பி பிரதான பின்புற கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு சேமிப்பு வகைகளில் வருகிறது.


Click it and Unblock the Notifications