கொரோனா ஊரடங்கு: iQoo 3 விற்பனை தொடக்கம்., விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

|

கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் iQoo 3 விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் ஒரு புதுவகை ஸ்மார்ட்போன்

இந்தியாவில் ஒரு புதுவகை ஸ்மார்ட்போன்

IQoo நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஒரு புதுவகை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. அந்த தொலைபேசியின் பெயர் iQoo 3. இந்த நிலையில் கொரோனா வைரஸின் பரவல் காரணமாக இந்த ஸ்மார்டபோனின் விலை குறைதத்து அறிவித்தது. இருப்பினும், அத்தியாவசியமற்ற பொருட்களின் விநியோகம் ஊரடங்கின் காரணமாக நிறுத்தப்பட்டதால் இந்த போனின் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசியமற்ற பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகள்

பச்சை மற்றும் ஆரஞ்சு பகுதிகள்

இருப்பினும், தற்போது ​​பச்சை மற்றும் ஆரஞ்சு அலர்ட் உள்ள பகுதிகளில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த பகுதிகளில் iqoo3 மாடல் செல்போன்களை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. iqoo நிறுவனம் தனது iQoo 3 மாடல் ஸ்மார்ட்போனை இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

jio காட்டுல மழை: குவியும் முதலீடுகள்., சில்வர் லேக் கொடுத்த பெரிய தொகை!jio காட்டுல மழை: குவியும் முதலீடுகள்., சில்வர் லேக் கொடுத்த பெரிய தொகை!

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம்

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம்

iQOO 3 இன் 4ஜி வசதி கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் வேரியண்டின் முந்தைய விலை ரூ.36,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.34,990-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வணிகரீதியில் கிடைக்கின்ற 5ஜி போன்

வணிகரீதியில் கிடைக்கின்ற 5ஜி போன்

இந்தியாவில் கிடைக்கும் முதல் வணிகரீதியில் கிடைக்கின்ற 5ஜி போன் என்ற பெயரை பெற்றுள்ளது இந்த அட்டகாசமான iQOO 3 ஸ்மார்ட்போன். மேலும் வேகமான நெட்வொர்க் வேகத்துடன் செயல்படும் வண்ணம் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

வேகமான 5 ஜி நெட்வொர்க்குகள்

வேகமான 5 ஜி நெட்வொர்க்குகள்

குறிப்பாக iQOO 3 பயனர்கள் நாட்டில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டவுடன்வேகமான 5 ஜி நெட்வொர்க்குகளை அதிகம் பயன்படுத்தக்கூடிய முதல் நபர்களாக இருப்பார்கள். பதிவேற்றும் வேகம், வீடியோ ஸ்ட்ரீமிங், போன்ற அருமையான வசதிகளை இந்த iQOO 3 மூலம் பயனர்கள் அனுபவிப்பர்கள். கிளவுட் மற்றும் இணைய அடிப்படையிலான சேவைகளுக்கு மிகவும் நம்பகமான இணைப்புடன், உங்கள் ஸ்மார்ட்போனில் அதிநவீன பயன்பாடுகள் மற்றும் மேகக்கணி சார்ந்த கேம்களை இயக்க முடியும். ஒட்டு மொத்தமாக, iQOO 3 மேம்பட்ட தகவல் தொடர்பு தரம் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் ஸ்மார்ட்போன் பயனர் அனுபவத்திற்கு மென்மையான அனுபவத்தை வழங்கும்.

865சிப்செட் வசதி மூலம் இயக்கப்படுகிறது

865சிப்செட் வசதி மூலம் இயக்கப்படுகிறது

இந்திய சந்தையில் வெளிவந்துள்ள iQOO 3 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி மூலம் இயக்கப்படுகிறது. 7nm சிப்செட் ஆதரவுடைய சாதனங்களுக்கு வேகமான இணையம், டெஸ்க்டாப்-நிலை கேமிங், சிக்கலான யுஐ மற்றும் மல்டி-ஜிகாபிட் 5 ஜி இணைப்பை செயல்படுத்துகிறது. SD865 ஆனது சாதன யுஐ ஐ செயல்படுத்துகிறது, இது iQOO 3 ஐ உயர்நிலை கிளவுட்-அடிப்படையிலான கேமிங், யுஐ- இயக்கப்பட்ட புகைப்படம் எடுத்தல், நிகழ்நேர யுஐ மொழிபெயர்ப்புகள் மற்றும் பலவற்றிற்கான சிறந்த கைபேசியாக மாற்றுகிறது. இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகமாக ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதி தான் இடம்பெறுகின்றன, ஆனால் இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி கொண்டு வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ola, uber சேவை தொடக்கம்: ஏசி ஆஃப், 2 பேர் மட்டும் அனுமதி, டிரைவரோடு ஒரு செல்பி, இன்னும் பல,ola, uber சேவை தொடக்கம்: ஏசி ஆஃப், 2 பேர் மட்டும் அனுமதி, டிரைவரோடு ஒரு செல்பி, இன்னும் பல,

வேகமான சிபியு வசதி

வேகமான சிபியு வசதி

இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் ஆனது வேகமான சிபியு வசதி LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 பிளாஷ் சேமிப்பு உள்ளிட் பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் கோப்பு பரிமாற்ற வேகத்தை வழங்குகிறது, அதேபோல் பல்வேறு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தகுந்தபடியும் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் யுஎஃப்எஸ் 3.1 ஃபிளாஷ் சேமிப்பகம் சாதனத்தை விரைவான பயன்பாடு மீட்டெடுப்பு மற்றும் கேச் வேகம் மற்றும் மல்டி-டாஸ்கிங் ஆகியவற்றில் உதவுகிறது.

4440 எம்ஏஎச் பேட்டரி

4440 எம்ஏஎச் பேட்டரி

IQOO 3 ஸ்மார்ட்போனில் 4440 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, மேலும் 55வாட் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக உதவுகிறது. ஃபாஸ்ட்-சார்ஜ் தொழில்நுட்பம் பெரிய 4,440 எம்ஏஎச் பேட்டரியின் 50% ஐ 15 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும். இதன் பொருள் நீங்கள் 35 நிமிடங்களுக்குள் iQOO 3 ஐ முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
iQoo 3 smartphone sale start in orange and green alert range

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X