வொர்த்து தலைவா.. டிசம்பர் கிஃப்ட்.. இந்த 5 போனுக்கு தாராளமா வெயிட் பண்ணலாம்.. வரிசைகட்டி வரும் புது போன்கள்..
இந்த 2024 ஆம் ஆண்டின் இறுதிக்கு வந்துவிட்டோம், டிசம்பர் மாதம் என்றாலே எல்லோருக்கும் ஒரு குதூகலம் தான். காரணம் ஒரு பக்கம் இயர்எண்டு சேல்ஸ் (year end sales) விற்பனை என்ற பெயரில் ஆஃப்பரில் பல பொருட்களை வாங்கி குவிக்கலாம். மற்றொரு பக்கம் கிறிஸ்துமஸ் பண்டிகை (Christmas) கொண்டாட்டம், கிஃபிட், புது வருட பிளானிங் மற்றும் பார்ட்டி என்று இப்போதே எல்லோருக்கும் பல திட்டங்கள் இருக்கும். இதற்கு நடுவே டிசம்பர் மாதத்தில் புதிய மொபைல் (mobile) அல்லது ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றும் சிலர் திட்டமிட்டு வருவீர்கள். உங்களுக்கான பதிவு தான் இது.
டிசம்பர் மாதத்தில் நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், உங்கள் முடிவு மிகவும் சிறப்பான முடிவென்றே நாங்கள் கூறுவோம். காரணம், இந்த டிசம்பர் மாதத்தில் மொத்தம் 5 சூப்பரான பவர்ஃபுள் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் செக்மென்ட் முதல் பிளாக்ஷிப் செக்மென்ட் வரை எல்லா பிரிவுகளிலும் வெளிவரவிருக்கிறது. இந்த ஒவ்வொரு போன்களையும் வெயிட் செய்து வாங்கும் அளவிற்கு இது வொர்த்தானது மக்களே. சரி, வாருங்கள் மொபைல் லிஸ்டை பார்க்கலாம்.

வொர்த்து தலைவா.. டிசம்பர் கிஃப்ட்.. வரிசைகட்டி வரும் புது போன்கள்:
1. iQOO 13:
இந்த iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் டிசம்பர் 3ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளாக்ஷிப் பிரிவில் ஒரு கலக்கலான போனாக வெளிவந்துள்ளது. இதில்
- 6.82 இன்ச் 2K டிஸ்பிளே (display)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite chipset)
- 50MP ட்ரிபிள் ரியர் கேமரா (camera)
- 6,000mAh பேட்டரி (பேட்டரி)
- 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (fast charging)
2. Vivo X200 மற்றும் Vivo X200 Pro:
Vivo X200 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனங்கள் வரும் டிசம்பர் 12ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இது பிரீமியம் போட்டோகிராபி சாதனமாக வெளிவருகிறது. இதில்,
- மீடியாடெக் டைமென்சிட்டி 9400 (MediaTek Dimensity 9400)
- 16GB ரேம் (RAM) மற்றும் 512GB ஸ்டோரேஜ் (storage)
- ஸ்டாண்டர்ட் மாடலில் 50MP கேமரா
- ப்ரோ மாடலில் 200MP கேமரா
3. OnePlus 13 மற்றும் OnePlus 13R:
ஒன்பிளஸ் நிறுவனம் இந்த போன்களை முதலில் டிசம்பர் மாதம் இறுதியில் சந்தைக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டது. ஆனால், இப்போது ஜனவரி துவக்கத்தில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில்,
- 6.82 இன்ச் 2K அமோலேட் டிஸ்பிளே (AMOLED)
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர்
- 50MP ட்ரிபிள் ரியர் கேமரா
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- 6,000mAh பேட்டரி
4. Tecno Phantom V Fold 2 மற்றும் Tecno Phantom V Flip 2:
Tecno Phantom V Fold 2 ஒரு ஃபோல்டபில் போனாகவும், Tecno Phantom V Flip 2 ஒரு கிலாம்ஷெல் ஃபிலிப் போனாகவும் வெளிவரவிருக்கிறது. இது டிசம்பர் 6ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில்,
- Phantom V Fold 2 போனில் 7.85" இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 9000+ சிப்செட் (MediaTek Dimensity 9000+)
- Phantom V Flip 2 போனில் 6.9" இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020)
5. Poco F7, POCO M7 Pro 5G மற்றும் POCO C75:
இந்த ஸ்மார்ட்போனை நிறுவனம் வரும் டிசம்பர் 17ம் தேதி அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் POCO M7 Pro 5G மற்றும் POCO C75 5G போன்களும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய போன்கள் வாங்க திட்டமிடுபவர்கள் இந்த மாதத்தில் கொஞ்சம் வெயிட் செய்து உங்களுக்கு பிடித்த மாடலை தேர்வு செய்து வாங்குவது வொர்த்தான காரியமாக அமையும்.


Click it and Unblock the Notifications








