ரிலீஸ் ஆனதும் ஆர்டர் போட்டுடனும்.. ஒரிஜினல் ஆள் ரவுண்டர் போன்னா அது இதான்.. iQOO 13 விலை என்ன?
நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்த ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துவிட்டது. விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான iQOO பிராண்ட் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான iQOO 13 சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுக தேதியை iQOO பிராண்டு அறிவித்துள்ளது. இந்த போன் ஒரு சக்தி வாய்ந்த ஆள் ரவுண்டர் ஸ்மார்ட்போனாக வெளிவரவுள்ளது. கேமர்களுக்கு கேமிங் போனாகவும், சாமானியர்களுக்கு சூப்பர் போனாகவும் இந்த போன் செயல்பட போகிறதென்று கூறப்படுகிறது. இந்த புதிய போனின் அறிமுகம் எப்போது? இதன் அம்சங்கள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.
iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் வரும் அக்டோபர் 30, 2024 ஆம் தேதி 4:00 மணி அளவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பிராண்டு அறிவித்துள்ளது. இந்திய நேரப்படி இந்த சாதனம் 06:30 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதை தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் இந்திய அறிமுகம் குறித்த டீசர்களும் வெளியிடப்பட்டுள்ளது.

iQOO 13 போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் ( iQOO 13 Specifications):
சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, அதிகம் எதிர்பார்க்கப்படும் iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் 6.82'' இன்ச் அளவு கொண்ட 3168×1440 பிக்சல் (pixels) கொண்ட 2K+ 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் பிளாட் டிஸ்பிளேவை இந்த சாதனம் (flat screen) கொண்டுள்ளது. இது BOE's Q10 லுமினஸ் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இது முழு பிரைட்னஸ் உடன் ஹை-ஃபிரிக்வென்சி டிம்மிங் மற்றும் சர்குலர் போலரைசேஷன் கண் பாதுகாப்புடன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த iQOO 13 போனின் டீசர் (Teaser) புகைப்படம், இந்த சாதனத்தை மெட்டல் பிரேம் (Metal Frame) உடன் காண்பிக்கிறது. இது இதன் உறுதியை நமக்கு உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (snapdragon 8 elite) 8 ஜெனரல் 4 SoC ஆல் இயக்கப்படடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் iQOO சமீபத்தில் ஃபிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் சிப்பைப் பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 50MP கொண்ட Sony IMX921 மெயின் கேமரா, 50MP உடன் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைடு சென்சார், 50MP உடன் Sony IMX826 டெலிபோட்டோ லென்ஸ் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை வழங்குகிறது.
LED ரிங் லைட் உடன் கேமரா:
முன்பக்கத்தில் 32MP அல்லது 50MP செல்பி கேமரா வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் 6150mAh பேட்டரி உடன் 120W பாஸ்டா சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நினைவுகூர, iQOO 12 சாதனம் 5000mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போனின் ரியர் கேமரா பம்பில் நிறுவனம் LED ரிங் லைட்டை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மல்டி லேயர் கிராபைன் மற்றும் 7K அல்ட்ரா லார்ஜ் ஏரியா விவி ஹீட் ஸ்பிரேட்டர் ஆதரவை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. ஹை-கிராபிக்ஸ் கேமிங் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டின் போது உங்கள் போன் சூடாவதை இது குறைக்கிறது. இந்த போன் இந்தியாவில் ரூ. 50,000 பட்ஜெட்டிற்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








