சிங்கம் சிங்கிளா தான்டா வரும்.. iQOO 13 வருகைக்கு தாயாருக்குங்கள்.. எப்போது அறிமுகம்? என்ன ஸ்பெஷல் தெரியுமா?
விவோ (Vivo) நிறுவனத்திற்கு சொந்தமான iQOO பிராண்ட் இப்போது ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது. iQOO 13 சாதனத்தை இப்போது நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அட்டகாசமான பல அம்சங்களுடன் சந்தைக்கு வரும் என்று சமீபத்திய லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல, இந்த போனிற்கு இப்போதே ஹைப் எகுறுகிறது. இந்த காலம் மற்றும் வரும் காலத்திற்கு ஏற்றார் போல ஒரு பவர்புல் ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த போனை பற்றி தெரிந்துகொள்வது சிறப்பானது.
சமீபத்தில் வெளியான லீக் தகவலின் படி, அதிகம் எதிர்பார்க்கப்படும் iQOO 13 ஸ்மார்ட்போன் சாதனம் 6.82'' இன்ச் அளவு கொண்ட 3168×1440 பிக்சல் (pixels) கொண்ட 2K+ 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் பிளாட் டிஸ்பிளேவை இந்த சாதனம் (flat screen) கொண்டுள்ளது. இது BOE's Q10 லுமினஸ் பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழு பிரைட்னஸ் உடன் ஹை-ஃபிரிக்வென்சி டிம்மிங் மற்றும் சர்குலர் போலரைசேஷன் கண் பாதுகாப்புடன் தொழில்நுட்பத்துடன் வருகிறது.

iQOO 13 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்:
இந்த புதிய iQOO 13 ஸ்மார்ட்போனின் பேசல் (bezel) முந்தைய மாடலை விட மெலிதாக இருக்குமென்றும், இது 2K தரத்தை மிக துல்லியமாக வழங்கும் டிஸ்பிளேவுடன் வரும் என்று லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த iQOO 13 போனின் டீசர் (Teaser) புகைப்படம், இந்த சாதனத்தை மெட்டல் பிரேம் (Metal Frame) உடன் காண்பிக்கிறது. இது இதன் உறுதியை நமக்கு உறுதிப்படுத்துகிறது.
புதிய iQOO 13 ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனமாக வெளிவருவத்தினால், இது நேரடியாக ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ரியல்மி ஜிடி7 ப்ரோ (realme GT7 Pro) மற்றும் சியோமி 15 (Xiaomi 15) போன்ற மாடல்களுடன் இந்திய சந்தையில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இந்த போன்களும் இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
OnePlus 13 போனின் சிறப்பம்சம்:
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி, ஒன்பிளஸ் (OnePlus 13), உலகின் முதல் இரண்டாம் தலைமுறை 2K BOE X2 டிஸ்பிளேவைப் பயன்படுத்தும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால், இது வளைந்த கர்வுடு டிஸ்பிளேவாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இது சுயமாக உருவாக்கப்பட்ட டிஸ்பிளே சிப் P2 ஐப் பயன்படுத்துகிறது. இது உலகின் முதல் டிஸ்பிளேமேட் A++ டிஸ்பிளேவைப் பயன்படுத்தும் என்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது.
ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டின் போது iQOO 13 இன் சரியான வெளியீட்டு தேதி உட்பட கூடுதல் விவரங்களை நாம் அறிந்திருக்க வேண்டும், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (snapdragon 8 elite) 8 ஜெனரல் 4 SoC ஆல் இயக்கப்படடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் iQOO சமீபத்தில் ஃபிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் சிப்பைப் பயன்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியது.


Click it and Unblock the Notifications








