Home
News

மிரளவிட வந்துட்டாப்ல.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் பிரைம் டே 2025 (Amazon Prime Day 2025) விற்பனையில் சோனி சென்சார் கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், புதிய ஏஸ் கிரீன் கலருடன் வெளியான ஐக்யூ 13 (iQOO 13) ஆர்டருக்கு கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் போக கிடைக்கும் இந்த புதிய கலர் வேரியண்ட்டின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஐக்யூ 13 ஏஸ் கிரீன் அமேசான் விற்பனை (iQOO 13 Ace Green Amazon Sale): இந்த ஐக்யூவின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.54,999ஆக இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம்.

மிரளவிட வந்துட்டாப்ல.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி!

எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த ஏஸ் கிரீன் (Ace Green) கலர் மட்டுமல்லாமல், லெஜண்ட் (Legend) மற்றும் நார்டோ கிரே (Nardo Grey) ஆகிய கலர்களிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) பேஸ்டு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மற்ற பீச்சர்களை பார்க்கலாம்.

ஐக்யூ 13 அம்சங்கள் (iQOO 13 Specifications): இந்த ஐக்யூவில் அல்ட்ரா பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இதுபோக பிரத்யேகமாக கியூ2 (Q2) கேமிங் கம்ப்யூட்டிங் சிப்செட் கிடைக்கிறது.

இந்த பிரீமியம் கேமிங் அவுட்புட்டுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும் பெரிய 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ஹீட்டிங் கன்ட்ரோல் கொடுக்க பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) கொடுக்கிறது. 50 எம்பி விசிஎஸ் ட்ரூ கலர் மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.

மிரளவிட வந்துட்டாப்ல.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 6000mAh பேட்டரி!

மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்921 (Sony IMX921) சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோ கேமராவிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், சோனி ஐஎம்எக்ஸ்816 (Sony IMX816) சென்சார் மற்றும் 4X இன்-சென்சார் ஜூமிங் கிடைக்கிறது. இதுபோக அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.

ஆகவே, சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சாருடன் 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவை பெற்று கொள்ளலாம். பிரீமியம் ஐக்யூ மாடல்களில் கூட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமே கிடைக்கிறது. ஆனால், இதில் டிரிபிள் ரியர் சிஸ்டம் கிடைப்பதால், கேமிங் மட்டுமல்லாமல், கேமராவிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் கேலக்ஸிகோர் (GC32E1) சென்சார் கிடைக்கிறது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144FPS கேமிங் அவுட் கொண்ட 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 2K ரெசொலூஷன், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2592Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. கிட்டத்தட்ட பிரீமியம் மாடலாகவே உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 13 Ace Green Variant Available For Purchase in Amazon Prime Day 2025 Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X