Home
News

12GB ரேம்.. 3 கேமரா.. தரமான டிஸ்பிளே.. iQOO 12 போன்களின் முக்கிய தகவல்.. எப்போது அறிமுகம்..

iQOO அதன் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. iQOO அதன் சமீபத்திய 12 சீரிஸ் வரிசை பிளாக்ஷிப் தொடர் ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவின் உள்நாட்டு சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

நாளை (நவம்பர் 7, 2023), iQOO நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் iQOO 12 மற்றும் iQOO 12 Pro ஆகிய 2 ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அறிமுகத்திற்கு சற்று முன்னதாக, இந்த புதிய iQOO 12 சீரிஸ் வரிசையில் விற்பனைக்கு வரவோருக்கும் புதிய வண்ண வகைகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

12GB ரேம்.. 3 கேமரா.. தரமான டிஸ்பிளே.. iQOO 12 போன்களின் முக்கிய தகவல்

iQOO பிராண்ட் அதன் அதிகாரப்பூர்வ Weibo கணக்கில் iQOO 12 மற்றும் iQOO 12 Pro ஸ்மார்ட்போனின் வண்ண விருப்பங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. வெய்யிபோ என்பது சீனாவின் மிகவும் பிரபலமான மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளம் பக்கமாகும். இந்த புதிய iQOO 12 சீரிஸ் போன்களின் வரிசையில் கிடைக்கவிருக்கும் சாதனங்களின் போஸ்டர் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த டீஸர்கள் வரவிருக்கும் iQOO 12 தொடரின் வண்ண விருப்பங்களை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. இந்த படங்களைப் பார்க்கும்போது, ​​iQOO 12 மற்றும் iQOO 12 ப்ரோ கிளாஸ் பின்புற பேனலைக் கொண்ட பிளாக் மற்றும் வைட் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதைக் தெளிவாக காண்பித்துள்ளது.

மறுபுறம், இரண்டு உயர்நிலை சாதனங்களும் ரெட் வேரியண்ட் உடன் ஒரு சாதாரண லெதரில் பூச்சுடன் வரும் என்றும் காண்பிக்கப்பட்டுள்ளது.. இந்த புதிய iQOO 12 சீரிஸ் பிரீமியம் கிரேடு சாதனங்கள், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 (Snapdragon 8 Gen 3) SoC உடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், அடிப்படை iQOO 12 சத்தானம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வரும் 12 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட உள்ளது.

இது இந்த சாதனத்தை இந்தியாவின் முதல் Snapdragon 8 Gen 3 இயங்கும் ஸ்மார்ட்போனாக மாற்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, iQOO 12 ப்ரோ வேரியண்ட் உலகளாவிய கிடைக்கும் தன்மை இன்னும் தெளிவாக இல்லை. எனவே இந்த மாடல் இந்தியாவிலோ அல்லது பிற சந்தைகளிலோ அறிமுகப்படுத்தப்படுவது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை.

ஆனால், டிசம்பர் மாதத்திற்குள் இது இந்திய சந்தையில் கால் பதிக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரெட் வண்ண iQOO 12 ஸ்மார்ட் போன் சாதனங்கள் அதிகம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் சீனா அறிமுகம் மிக அருகில் இருப்பதால், iQOO 12 மற்றும் iQOO 12 Pro பற்றிய கூடுதல் விரிவான விபரங்களை பார்க்க, எங்கள் இணையதள பக்கத்துடன் இணைந்திருங்கள்.

iQOO 12 சிறப்பம்சம் (iQOO 12 Specifications):
- 6.78' இன்ச் கொண்ட OLED டிஸ்பிளே
- 144 Hz ரெஃப்ரஷ் ரேட்
- 12ஜிபி ரேம்
- 128ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா
- 50 MP + 50 MP + 64 MP ட்ரிபிள் கேமரா
- LED பிளாஷ்
- 16MP முன்பக்க கேமரா
- பாஸ்ட் சார்ஜிங்
- 5000 mah பேட்டரி

Best Mobiles in India

English summary
iQOO 12 and iQOO 12 Pro Launching In 3 More Vibrant Colours Tomorrow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X