Home
News

ஆரம்பமே அட்டகாசம்.. ரூ.2999 மதிப்புள்ள Vivo TWS இலவசம்.. iQOO 12 விற்பனை பிச்சுக்கும் போலயே!

ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடலுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி அன்று நடக்கவுள்ளது.

மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகமாக உள்ளது. அதனை தொடர்ந்து வருகிற 2024 அம்மா ஆண்டு ஜனவரி 23 அல்லது 24 இல் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.2999 மதிப்புள்ள Vivo TWS இலவசம்! iQOO 12 விற்பனை பிச்சுக்கும் போல!

இதற்கிடையில் ஒன்பிளஸ் 12 உடனான போட்டியை அதிகரிக்கும் வண்ணம் ஐக்யூ நிறுவனம் ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் மீதான எர்லி அக்சஸ் / ப்ரீ புக்கிங் சலுகைகளை (Early Access / Pre Booking Offers) அறிவித்துள்ளது. அதென்ன சலுகைகள்? இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ஐக்யூ, அதன் ஐக்யூ 12 சீரிஸின் கீழ் ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ என்கிற 2 மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து வெண்ணிலா வேரியண்ட் ஆன ஐக்யூ 12 மாடலை வருகிற டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ப்ரோ வேரியண்ட் ஆன ஐக்யூ 12 ப்ரோ அறிமுகம் குறித்து எந்த தகவலும் இல்லை.

ரூ.2999 மதிப்புள்ள Vivo TWS இலவசம்! iQOO 12 விற்பனை பிச்சுக்கும் போல!

இதற்கிடையில் அமேசான் இந்தியா (Amazon India) அல்லது ஐக்யூ.காம் (iQoo.com) வழியாக ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்வதன் மூலம் ஐக்யூவின் ப்ரையாரிட்டி பாஸ்-ஐ பெறலாம் என்றும், இந்த பாஸ் 5 டிசம்பர் 2023 முதல் 7 டிசம்பர் 2023 வரை கிடைக்கும் என்றும் ஐக்யூ அறிவித்துள்ளது.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய விரும்பும் அனைவருக்குமே இந்த பாஸ் கிடைக்கும். அதே நேரத்தில், இந்த பாஸ்கள் எண்ணிக்கையில் வரையறுக்கப்பட்டவை. எனவே யார் முதலில் வாங்குகிறார்களோ அவர்களுக்கே கிடைக்கும் என்றும் ஐக்யூ குறிப்பிட்டுள்ளது.

ரூ.2999 மதிப்புள்ள Vivo TWS இலவசம்! iQOO 12 விற்பனை பிச்சுக்கும் போல!

இந்த பாஸின் விலை ரூ.999 ஆகும். இது திரும்பப்பெறக்கூடிய ஒரு தொகையாகும். அதாவது இந்த தொகை ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை வாங்கும் இறுதி கட்டணத்தில் கழித்துக்கொள்ளப்படும். இதுதவிர்த்து இந்த பாஸ்-ஐ வைத்து இருப்போருக்கு ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்வதற்கான ஆரம்ப அணுகலும் கிடைக்கும். இதன்கீழ் பொது விற்பனைக்கான 24 மணி நேரத்திற்கு முன்பே உங்களால் இந்த ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்ய முடியும்.

மேலும் ஐக்யூ 11 5ஜி உடனான தற்போதைய சலுகையை போலவே, ஐக்யூ 12 ஸ்மார்ட்போனுடன் ரூ.2999 மதிப்புள்ள விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வெளியீட்டு சலுகைகள் டிசம்பர் 12 ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்.

ஐக்யூ 12 அம்சங்கள்: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா + 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 144Hz 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளே, பிளாஷ்சார்ஜ் டெக் உடனான 120W சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

ஐக்யூ 12 விலை: இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி 12ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 16ஜிபி + 512ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். லீக் ஆன ரீடெயில் பாக்ஸின் (Retail Box) புகைப்படத்தின்படி, இந்த ஸ்மார்ட்போன் ரூ.50,999 மற்றும் ரூ.59,999 க்குள் அறிமுகம் செய்யப்படும்; இதன் எம்ஆர்பி (MRP) ரூ.56,999 ஆக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO 12 5G Priority Pass Cost Free Vivo TWS Announced India Launch Dec 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X