Home
News

ஆட்டம் சூடு பிடிச்சுருச்சு! வரவே இல்ல.. அதுக்குள்ள OnePlus 12-க்கு ஆப்பு வைக்கும் விலையில் iQOO 12 5G!

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) வருகிற டிசம்பர் 5 அன்று சீனாவிலும், அதை தொடர்ந்து ஜனவரி 24இல் இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது. இதற்கிடையில் ஐக்யூவின் புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போனான ஐக்யூ 12 5ஜி (iQOO 12 5G) டிசம்பர் 12 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

ஐக்யூ 12 சீரிஸின் கீழ் ஐக்யூ 12 மற்றும் ஐக்யூ 12 ப்ரோ என்கிற 2 மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகமாகிவிட்டதால், இந்தியாவிற்கு வரும் ஐக்யூ 12-ன் அம்சங்கள் பற்றிய எந்த குழப்பமும் இல்லை. ஆனால் இது என்ன விலைக்கு இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே இருந்தது.

OnePlus 12-க்கு ஆப்பு வைக்கும் விலையில் iQOO 12 5G!

தற்போது அதுகுறித்த தகவலும் வெளியாகியுள்ளது. ஐக்யூ 12-ன் இந்திய விலை நிர்ணயத்தை வைத்து பார்க்கும் போது, இது ஒன்பிளஸ் 12-க்கு கடும் போட்டியாக இருக்கும் என்பது போல் தெரிகிறது. அப்படி என்ன விலை? மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 12 என்ன விலைக்கு வரும்? இவ்விரு போன்களும் என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஐக்யூ 12 VS ஒன்பிளஸ் 12: ஐக்யூ 12 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயங்குகிறது. வரவிருக்கும் ஒன்பிளஸ் 12 மாடலும் கூட இதே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை தான் பேக் செய்யவுள்ளது.

OnePlus 12-க்கு ஆப்பு வைக்கும் விலையில் iQOO 12 5G!

ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பிலும் கூட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா தான் இடம்பெறவுள்ளது. ஒன்பிளஸ் 12-ன் மெயின் கேமராவானது சோனி எல்ஒய்டி-808 சென்சார் உடன் வரும்.

ஐக்யூ 12-ன் கேமரா செட்டப்பில் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிலும் கூட 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்யூ 12-ல் 100எக்ஸ் ஜூமிங்கும், ஒன்பிளஸ் 12-இல் 3எக்ஸ் ஜூமிங்கும் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

OnePlus 12-க்கு ஆப்பு வைக்கும் விலையில் iQOO 12 5G!

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது 1டிபி வரையிலான UFS4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ், 120வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி, 1.5கே (1260 x 2800 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஐக்யூ 12 இந்திய விலை: நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா (@stufflistings) ஐக்யூ 12 5ஜி ரீடெயில் பாக்ஸின் (Retail Box) புகைப்படத்தை லீக் செய்துள்ளார். அதன்படி ஐக்யூ 12 5ஜி ஆண்டு ரூ.50,999 மற்றும் ரூ.59,999 க்குள் அறிமுகம் செய்யப்படும்; இந்த ஸ்மார்ட்போனின் எம்ஆர்பி (MRP) ரூ.56,999 ஆக இருக்கும்.

இந்தியாவில் ஐக்யூ 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும். முன்னரே குறிப்பிட்டபடி, இது வருகிற டிசம்பர் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் வெளியாகும். அதனை தொடர்ந்து அமேசான் இந்தியா (Amazon India) வழியாக விற்பனைக்கு வரும்

ஒன்பிளஸ் 12 விலை: ஒன்பிளஸ் 12-ன் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பாக இது ரூ.80,000 பட்ஜெட்டில் வரும் என்கிற யூகங்கள் இருந்தன. ஆனால் இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும் என்கிற தகவல்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்ட பின்னர், பெரும்பாலும் இது ஒன்பிளஸ் 11-ன் விலை வரம்புடன் ஒற்றுப்போகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக புதிய ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயமானது ரூ.65,000-ஐ தாண்டாது. எப்படி பார்த்தாலும் இது ஐக்யூ 12-ஐ விட அதிக விலைக்கே வரும். இது ஒன்பிளஸ் 12-ன் இந்திய விற்பனையை சிறிதளவேனும் பாதிக்கலாம்!

Best Mobiles in India

English summary
iQoo 12 5G Price in India Competition to OnePlus 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X