கேமிங் பிரியர்களே ரெடியா: ஐக்யூ 10, ஐக்யூ 10 ப்ரோ வெளியீட்டு தேதி இதுதானா?- அம்சங்கள் வேறலெவல்!

|

ஐக்யூ 9 சாதனத்தை விட மேம்பட்ட கேமிங் அனுபவங்களை ஐக்யூ 10 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எனவும் இந்த ஐக்யூ 10 ஸ்மார்ட்போனானது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இரண்டு மாடல்கள் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி ஆதரவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ 9 தொடர் ஸ்மார்ட்போன்

ஐக்யூ 9 தொடர் ஸ்மார்ட்போன்

ஐக்யூ நிறுவனம் சமீபத்தில் ஐக்யூ 9 தொடர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. தற்போது நிறுவனம் அடுத்த தலைமுறை சிப்செட் உடன் ஐக்யூ 10 தொடர் ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. இந்த தொடரில் ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ ப்ரோ மாடல்கள் இடம்பெறும் என சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ

ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ

டிப்ஸ்டர் டிஜிட்டல் தளத்தின் அறிக்கைப்படி, ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஜூலை மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ஐக்யூ 9 சாதனத்தை விட மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் எனவும் கூறப்படுகிறது. கேமிங் அனுபவத்தை தவிர இந்த சாதனத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது எனவும் வடிவமைப்பைப் பொறுத்த வரை ஐக்யூ 10 தொடர் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டிருக்கும் எனவும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் ஆதரவு

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் ஆதரவு

ஐக்யூ 10 தொடரில் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் ஆதரவோடு வெளியான முதல் ஸ்மார்ட்போன்களில் ஐக்யூ 9 ப்ரோ ஸ்மார்ட்போனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்யூ 9 தொடரை போன்றே இந்த தொடரிலும் எஸ்இ மாடல் வெளியிடப்படுமா என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.

ஐக்யூ 10 ஸ்மார்ட்போன் அம்சங்கள்

ஐக்யூ 10 ஸ்மார்ட்போன் அம்சங்கள்

ஐக்யூ 10 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து லீக்கான தகவல்கள் குறித்து பார்க்கலாம். ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 2கே அமோலெட் எல்டிபி 2.0 டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் 4700 எம்ஏஎச் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் 50 எம்பி பிரதான கேமரா இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் பிற கேமரா அம்சங்கள் குறித்த விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.

ஐக்யூ நியோ 6 அறிமுகம்

ஐக்யூ நியோ 6 அறிமுகம்

சமீபத்தில் இந்தியாவில் ஐக்யூ நியோ 6 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனமானது சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டது. ஐக்யூ நியோ 6 சாதனத்தின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ஆனது ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.33,999 ஆக இருக்கிறது. இந்த சாதனம் ஆனது சைபர் ரேஜ் மற்றும் டார்க் நோவா வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள்

ஐக்யூ நியோ 6 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஐக்யோ நியோ 6 சாதனமானது இரட்டை சிம் (நானோ), ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) இ4 அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவுடன் செயல்படுகிறது. கேமிங்கின் போது மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மையாக்காக திரவ குளிரூட்டும் நீராவி அறை வசதி இதில் இருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Iqoo 10, Iqoo 10 Pro Smartphone Might be Launch on July: Upgraded Gaming Experience

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X