கான்ஸ்டபிள் வழக்கை விசாரிக்கும் உயர் அதிகாரியின் டிக் டாக் வீடியோ லீக்கானது!
குஜராத் மாநிலத்தின், மஹெசேனா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் அர்பிதா சவுத்ரி. இரண்டு தினங்களுக்கு முன்பு இவரின் டிக் டாக் வீடியோ வலைத்தளங்களில் வைரல் ஆனது. வேலை நேரத்தில் டிக் டாக் வீடியோ செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சீருடை இல்லாமல் அலுவலகத்தில் டிக்டாக்
டிக் டாக் வீடியோ செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், காவல் நிலையத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சீருடை இல்லாமல் மப்டியில் இந்திப் பாடல் ஒன்றுக்கு டிக் டாக் வீடியோ செய்திருக்கிறார். இவர் பதிவு செய்தது வீடியோ பின்னால் லாக்கப் சிறை மற்றும் முழு அலுவலகம் பதிவாகியுள்ளது.
வைரல் ஆகிய கான்ஸ்டபிள் அர்பிதா
இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது. காவல்துறை அதிகாரி பொறுப்பில்லாமல் டிக்டாக் வீடியோ செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் காவல்துறை விசாரணையைத் துவங்கியது.

ஐபிஎஸ் அதிகாரி மஞ்சிதா வன்சாரா
வேலை நேரத்தில் கான்ஸ்டபிள் அர்பிதா சவுத்ரி வேலை செய்யாமல், காவல் நிலையத்தில் சீருடை இல்லாமல் இருந்த காரணத்திற்காக சஸ்பெண்ட் செய்ய்யபட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிக்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி மஞ்சிதா வன்சாரா நியமிக்கப்பட்டார்.

இளம் பொலிஸ் அதிகாரி டிக் டாக்
தற்பொழுது வழக்கை விசாரிக்கும் ஐபிஎஸ் அதிகாரி மஞ்சிதா வன்சாராவின் டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது, அதற்கு மஞ்சிதா வன்சாரா பதில் அளித்துள்ளார். "இளம் பொலிஸ் அதிகாரி" என்ற வகையில் சமூக ஊடகங்களில் இருக்க அவருக்கு முழு உரிமையும் உண்டு என்று தெரிவித்திருக்கிறார்.

விசாரணை அதிகாரியின் பதில்
அதேபோல் வேலை நேரத்தில் அவர் இதுவரை எந்த வீடியோ பதிவும் டிக் டாக்கில் செய்தது இல்லை என்றும் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். டிக் டாக் எனக்குப் பொழுது போக்கு என்றும் தெரிவித்திருக்கிறார். அர்பிதா சவுத்ரி வேலை நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்ததற்காக மட்டுமே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், டிக் டாக் செய்ததற்காக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications