பெங்களூரு வாசிகள் ஹேப்பி.. இந்தியாவின் மிகப்பெரிய Apple பார்ட்னர் ஸ்டோர் திறப்பு.. பலே ஆபர்களும் அறிவிப்பு!
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் டாப் பார்ட்னர்களில் ஒன்றான ஐபிளான்ட் (iPlanet), பெங்களூருவில் உள்ள இந்திராநகரில் இந்தியாவின் மிகப்பெரிய ஆப்பிள் பிரீமியம் பார்ட்னர் ஸ்டோரை திறந்துள்ளது. இந்த திறப்பு விழாவின் ஒரு பகுதியாக பல்வேறு வகையான ஆப்பிள் தயாரிப்புகளின் மீது சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திராநகரில் உள்ள 100 அடி சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய ஐபிளானட் ஸ்டோர் ஆனது அதன் ஒப்பற்ற ஆப்பிள் நிபுணர்களுடன் விரிவான ஆப்பிள் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. இங்கே லேட்டஸ்ட் ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்ஸ், ஹோம்பாட் டிவைஸ்கள் மற்றும் பல்வேறு அக்ஸசெரீஸ் உட்பட பல்வேறு ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் ஆராயலாம்.

சலுகைகளை பொறுத்தவரை, பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரானிக் கேஜெட்களை மறுவிற்பனை செய்யும் முன்னணி ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான கேஷிப்பை (Cashify), ஐபோன்களின் மீது ரூ.8000 வரையிலான பிரத்யேக எக்ஸ்சேஞ்ச் போனஸை வழங்குகிறது. இந்த சலுகை, தங்கள் பழைய ஐபோன்களை மேம்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களையும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு அப்கிரேட் ஆக விரும்பும் வாடிக்கையாளர்களையும் நிச்சயம் ஈர்க்கும்.
இதுதவிர்த்து, இந்த புதிய ஐபிளான்ட் ஸ்டோர் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, சர்விஃபை (Servify) நிறுவனமானது ஐபோன்களுக்கான ஆப்பிள்கேர் (AppleCare) சேவைகளுடன் ப்ரொடெக்ட் பிளஸில் (Protect+) 50% தள்ளுபடியை வழங்குகிறது. இது போதாது என, வாடிக்கையாளர்கள் எச்டிஎப்சி பேங்க் வழியாக ரூ.10,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் மேக்புக் மீது கேஷிஃபையின் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கிறது.

மேலும் பேடிஎம் ஆப் வாடிக்கையாளர்கள் ரூ.700 மதிப்புள்ள திரைப்பட வவுச்சரை வெல்வதற்கான வாய்ப்பையும் பெறுவார்கள். கூடுதலாக பேடிஎம் போஸ்ட்பெய்ட் மற்றும் வாலட் வாடிக்கையாளர்கள், அனைத்து முன் பதிவுகளுக்கும் ரூ.300 முதல் ரூ.700 வரையிலான தள்ளுபடி வவுச்சர்களையும் பெறுவார்கள். இந்த சிறப்பு சலுகைகள் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31, 2023 வரை அணுக கிடைக்கும்.
டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை மட்டுமே கிடைக்கும் பிரத்யேக சலுகைகளை பொறுத்தவரை ஐபோன் மாடல்களின் மீது ரூ.18,000 வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஐபோன்களை வாங்குவதற்கான இஎம்ஐ விருப்பம் ரூ.1,501 முதல் தொடங்குகிறது. இதேபோல மேக் மாடல்கள் மீது ரூ.64,980 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேக்புக்கான இஎம்ஐ விருப்பம் ரூ.2,299 முதல் தொடங்குகிறது
ஆப்பிள் வாட்ச்களின் மீது 15% வரை தள்ளுபடி கிடைக்கும். ஆப்பிள் வாட்ச் மாடல்களின் மீதான இஎம்ஐ விருப்பம் ரூ.1,059 முதல் தொடங்குகிறது. ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல்களின் மீது 13% தள்ளுபடி கிடைக்கும் எந்த ஐபேட் மாடலுக்கும் 12% தள்ளுபடி கிடைக்கும். ஐபோன்களுக்கான ஆப்பிள் கேர் சேவைகள் உடனான ப்ரொடெக்ட் பிளஸில் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் இந்த புத்தம் புதிய ஸ்டோரின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், 29 பிப்ரவரி 2024 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் ஆப்பிள் ப்ராடெக்ட் வொர்க்ஷாப்ஸ் உட்பட பல நிகழ்வுகளை உள்ளடக்கிய 3 நாள் திருவிழாவையும் ஐபிளானட் நடத்துகிறது. இதன்கீழ் ரிவார்ட் பரிசுகள் மற்றும் கிஃப்ட் வவுச்சர்களை வெல்வதற்கான போட்டிகளும் நடக்கும்.
தென்னிந்தியாவில் 17 நகரங்களில் 41-க்கும் மேற்பட்ட ஐபிளாண்ட் ஸ்டோர்கள் மற்றும் 36 சேவை மையங்கள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பெங்களூரு இந்திராநகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஐபிளானட் ஸ்டோர் ஆனது 3,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்து, மேம்பட்ட ஷாப்பிங் அனுபவத்தை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








