மொபைல் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்.! கட்டுக்கட்டாக பணம், செல்போன் பறிமுதல்.!

|

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் மொபைல் செயலி மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து 100கோடி ரூபாய் அளவில் கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்த கும்பலை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளர். மேலும் இவரிகளிடமிருந்து கட்டக்கட்டாக பணம் பறிமுதல் செய்துள்ளனர்.

 ஹைதரபாத்தில் உள்ள பசீராபாத் பகுதியில்

வெளிவந்த தகவலின்படி ஹைதரபாத்தில் உள்ள பசீராபாத் பகுதியில் நடந்த இந்த சூதாட்டத்தை பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற போலீசார் பிரத்யேக மொபைல் செயலிகள் மூலம் பந்தயம் கட்டி சூதாட்டம் நடத்திய கும்பலை சேர்ந்த தலைவன் சந்தூர் சஷாங் உட்பட அவனுடைய கூட்டாளிகள் 8பேரை கைது செய்துள்ளர்.

25லட்சம் ரூபாய் பணம்

மேலும் இவர்களிடமிருந்து 25லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு இந்த கும்பலை சேர்ந்த 8பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர் எனத் தகவல் கிடைத்துள்ளது.

16 எம்பி செல்பி கேமரா, 4 ஜிபி ரேம்: அறிமுகமான ஓப்போ ஏ73- இதோ விவரங்கள்!

சூதாட்டத்திற்கு

குறிப்பாக இந்த சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வங்கி கணக்கிலிருந்து 13லட்சம் ரூபாய் பணத்தை போலீசார்

முடக்கியுள்ளதோடு, கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறிவைத்து இந்த சூதாட்டம் நடந்ததாகவும் இதுவரை சுமார் 230கோடி ரூபாய் அளவில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெற்றிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ள்ளவர்களை செல்போன்

வெளிவந்த தகவலின்படி Cricketline மற்றும் Cricket Exchanger போன்ற செயலிகளை பயன்படுத்தி

கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு குறைந்தது 50,000ரூபாய் டெபாசிட் என்கிற நிபந்தனையுடன் இந்த சூதாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது.

போட்டியின் முடிவில் பணத்தை

நடைபெறும் போட்டியின் முடிவில் பணத்தை செட்டில் செய்வது மெயின் புக்கிங்களுக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை உள்ளிட்டவை சந்தூர் சஷாங் மூலம் நடைபெற்றுள்ளதாக சைபராபாத் காவல் ஆணையர் தெரிவத்திருக்கிறார் என்பது

குறிப்பிடத்தக்கது.

செகண்ட் ஹேண்ட் ஸ்மார்ட்போன் திருட்டு போனா?- எளிதாக கண்டுபிடிக்கலாம்!

 சனிக்கிழமை துபாயில்

இதேபோன்று கடந்த சனிக்கிழமை துபாயில் நடைபெற்ற போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக எழுந்த புகாரையடுத்து ஹரியானா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரேவாரி என்கிற இடத்தில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3பேர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து சுமார் ஆறு லட்சம் ரூபாய் 12செல்போன்கள் ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு நோட்புக் உள்ளிட்டவை இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IPL Gambling Through Mobile App Found And Ceased In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X