ராட்சச LED ஸ்கிரீன்.. IPL போட்டி லைவ் மேட்ச்.. அனுமதி இலவசம்.. 3000 பேர் அமர்ந்து பார்க்க அனுமதி.. எங்கே?
IPL ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ் வெளியாகியுள்ளது. திறந்தவெளி அரங்கில் இராட்சஸ LED டிஸ்பிளே அமைத்து, மக்கள் எல்லாம் ஒரே இடத்தில் கூடி, இலவசமாக IPL போட்டியை கண்டு மகிழ அனுமதித்த IPL ஃபேன்ஸ் பார்க் மீண்டும் வருகிறது.
ஐபிஎல் 2024 (IPL 2024):ஆம், மக்களே கடந்த Indian Premier League 2023 போட்டியின் பொழுது, இறுதி போட்டியை பெரிய திரைகளில் இலவசமாக ஒளிபரப்ப ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க் (IPL Fans Park) என்ற திட்டத்தை ஜியோசினிமா அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு மே 28ம் தேதியில் நடைபெற்ற IPL இறுதி போட்டியை நாக்பூர், கான்பூர், காரக்பூர் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களில் பெரிய டிஸ்பிளே ஸ்கிரீன் அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க் (IPL Fans Park): ஆனால், இந்த முறை IPL போட்டி துவங்கும் முதல் நாளில் இருந்து இறுதி போட்டி முடியும் வரை ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க் திறந்திருக்க போகிறது. இந்த ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க் இப்போது தமிழ்நாட்டிற்கும் வந்துள்ளது. ஆம், மக்களே தமிழ்நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களில் உள்ள திறந்தவெளி அரங்கங்களில் IPL போட்டிகளை பெரிய ஸ்கிரீனில் ஒளிபரப்பப் போகிறார்கள்.
மதுரையில் ராட்சச டிஸ்பிளே: முதற்கட்டமாக, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரு ராட்சச சைஸ் LED டிஸ்பிளே அமைக்கும் வேலை இப்போது துவங்கப்பட்டுள்ளது. 32 x 18 என்ற அளவிலான ராட்சத திரையில் கிரிக்கெட் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்படும். முதல் ஐபிஎல் போட்டி நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மெகா சைஸ் டிஸ்பிளே அமைக்கப்படும் பனி தீவிரமான நடைபெற்று வருகிறது.
3000 மக்கள் அமர்ந்து IPL போட்டி காண ஏற்பாடு: இந்த ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் ஒன்று கூடி அமர்ந்து IPL 2024 போட்டிகளை ரசிக்கும் வகையில் ரேஸ்கோர்ஸ் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னும் சில நகரங்களிலும் IPL 2024 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் IPL டெலிகாஸ்ட்: இதற்காக பிசிசிஐ (BCCI) மதுரையில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தேர்வு செய்துள்ளது. இன்னும் மற்ற நகரங்களில் உள்ள இடங்கள் எது தேர்வாகியுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்துதலின்பேரில் 24 ஏக்கர் பரப்பளவு உள்ள மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் போட்டிகள் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
பொதுமக்களுக்கு இலவச அனுமதி: ஆம், இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தாராளமாக ரேஸ்கோர்ஸ் மைதானத்தை அணுகி, ரேஸ்கோர் மைதானத்தில் அமர்ந்து இராட்சஸ டிஸ்பிளேவில் ஒளிபரப்பப்படும் IPL லைவ் மேட்ச்களை கண்டு மகிழலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்தில் IPL போட்டிகள் ஒளிபரப்பப்படும்? இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் சுமார் 3,000 பேர் அமர்ந்து IPL 2024 லைவ் போட்டிகளை காணும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், இந்தியாவில் உள்ள 27 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஒளிபரப்பு நேரம் பற்றி பேசுகையில், பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த ஐபிஎல் ஃபேன்ஸ் பார்க்கில் ரசிகர்கள் போட்டிகளை பார்வையிடலாம்.
முக்கிய அறிவிப்பு: இந்த முறை IPL 2024 போட்டிகள் முடியும் வரை இந்த அரங்கங்களில் தொடர்ந்து லைவ் மேட்ச்கள் ஒளிபரபரப்படும். இரவு 10 மணி முதல் சவுண்ட் இல்லாமல் நாளிரவு 12 மணி வரை போட்டிகள் ஒளிப்பரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 இந்த முதல் போட்டி மார்ச் 22 துவங்குகிறது, அன்று முதல் இறுதிப்போட்டி நிறைவடையும் வரை இந்த இடத்தில் போட்டிகள் தொடர்ந்து லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








