Jio, Airtel, Vi சிம் இருக்கா.. ஐபிஎல் 2025 ஃபைனல் மேட்ச்.. ரூ.100-க்கு 90 நாட்கள்.. போட்டிக்கு மட்டுமில்ல!
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி (IPL 2025 Final) இன்று இரவு நடக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) ஓடிடி ஆப் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மட்டுமல்லாமல், அடிமட்ட விலைக்கு 90 நாட்களுக்கு லேட்டஸ்டஸ் மூவிக்கள், டிவி ஷோக்கள் மற்றும் சீரிஸ்களை கொடுக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா திட்டங்களை பார்க்கலாம். இதில் ஜியோ (Jio) மட்டுமல்லாமல், ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியாவில் (Vodafone Idea) கிடைக்கும் திட்டங்களும் இருக்கின்றன.
அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகின்றன. இதனால், ஐபிஎல் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால், பெங்களூரு அணியானது, இந்த சீசனிலாவது வெற்றி பெறுமா என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் அழிக்க முடியாததாக மாறிவிட்டது.

இந்த இறுதிப்போட்டியை காண ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெறுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால், ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மட்டுமல்லாமல், லேட்டஸ்ட் மூவிக்கள், ஷோக்கள் மற்றும் சீரிஸ்களை 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் கொடுக்கிறது. ஜியோவில் இருந்து திட்டங்களை ஆரம்பிப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் ரூ.100 மதிப்பிலான டேட்டா திட்டத்திலேயே ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் சந்தாவுடன் ஜியோஹாட்ஸ்டார் கிடைக்கும். அதேபோல 5 ஜிபி டேட்டா மற்றும் அந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.
பார்தி ஏர்டெல் நிறுவனத்திலும் ரூ.100 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வருகிறது. ஆனால், இதில் டேட்டாவுக்கும், ஓடிடி சந்தாவுக்கும் கிடைக்கும் வேலிடிட்டியில் வேறுபாடு இருக்கும். அதாவது, இந்த திட்டத்துக்கும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் சந்தா கொடுக்கப்படும். ஆனால், 5 ஜிபி டேட்டாவுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும்.
வோடபோன் ஐடியாவில் ரூ.101 மதிப்பிலான டேட்டா திட்டத்தில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆகவே, இந்த டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கான ஜியோஹாஸ்டார் சந்தா மற்றும் 4 ஜிபி டேட்டா வருகிறது. இந்த டேட்டாவுக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மேற்கண்ட திட்டங்கள் மூலம் ஐபிஎல் லைவ் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது.
ஒருவேளை ஜியோ கஸ்டமர்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளுடன் 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், அவர்களுக்கு ஒரேவொரு ஆப்ஷன் மட்டுமே இருக்கிறது. இந்த திட்டத்துக்கும் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை போலவே 3 மாதங்களுக்கு சலுகைகள் கிடைக்கிறது. இதன் சலுகையை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்திலேயே இந்த சலுகைகள் கிடைக்கின்றன. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுக்கும் 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது.
இந்த 5ஜி டேட்டா போக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. மேலும், ஜியோ டிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆப்களின் சலுகைகளை பெற்று கொள்ளலாம். மூன்று மாதங்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications