இது அம்பானி விருந்துடா.. Jio 200GB டேட்டா.. 90 நாள் வேலிடிட்டி.. IPL ரசிகர்களுக்கு 20GB ஃபிரீ டேட்டாவா?
IPL 2024 கிரிக்கெட் போட்டிகள் துவங்கிய நேரத்தில் இருந்து, டெலிகாம் திட்டங்களில் நிறைய மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக, ஜியோ (Jio) நிறுவனம் பல மாற்றங்களை அறிவித்து வருகிறது. இப்போது 20GB இலவச டேட்டாவை வழங்கியுள்ளது.
ஜியோ வழங்கியுள்ள இந்த 20GB இலவச டேட்டா யாருக்கெல்லாம் கிடைக்கும்? எந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் இந்த 20GB டேட்டா கிடைக்கும்? இந்த 20GB டேட்டாவிற்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு? என்பது போன்ற விபரங்களை இப்போது பார்க்கலாம். ஜியோ அறிவித்துள்ள புதிய தகவலின் படி, அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டியலில் 90 நாள் வேலிடிட்டி உடன் வரும் ரூ.749 திட்டத்தின் நன்மையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 749 Prepaid Recharge Plan):
ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்க கூடியது. இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வழக்கமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 SMS போன்ற நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் ஜியோ வழங்கும் இலவச ஜியோ சேவைகளும் அணுக கிடைக்கிறது.
ஜியோ வழங்கும் இலவச சேவையின் கீழ், இந்த திட்டத்துடன் உங்களுக்கு ஜியோசினிமாவிற்கான சந்தா கிடைக்கிறது. இது ஜியோ சினிமா (JioCinema) பிரீமியம் அல்லாத நார்மல் சந்தா என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இத்துடன் ஜியோ கிளவுட் (JioCloud) மற்றும் ஜியோ டிவி (JioTV) போன்ற சேவைகளின் இலவச நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் ஜியோ வழங்கும் இலவச அன்லிமிடெட் 5ஜி நன்மையையும் கிடைக்கிறது.
20GB எக்ஸ்ட்ரா டேட்டாவுடன் மொத்தம் 200GB டேட்டா கிடைக்கும் திட்டம்:
IPL 2024 கிரிக்கெட் போட்டிக்காக ஜியோ தற்போது 20GB எக்ஸ்ட்ரா டேட்டாவை இலவசமாக வழங்கியுள்ளது. அதன் கிரிக்கெட் சலுகையின் ஒரு பகுதியாக, ஜியோ இந்த திட்டத்தில் 20ஜிபி போனஸ் டேட்டாவை வழங்குகிறது. எனவே நீங்கள் 90 நாட்களுக்கு 200GB டேட்டாவை பெறுகிறீர்கள். அதாவது திட்டத்துடன் தினமும் கிடைக்கும் 2ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு மொத்தமாக 180GB டேட்டாவை வழங்குகிறது.
இத்துடன் ஜியோ தற்போது இலவசமாக வழங்கும் 20GB எக்ஸ்ட்ரா டேட்டாவுடன் இந்த திட்டம் மொத்தமாக 200GB டேட்டாவை வழங்குகிறது. 20ஜிபி போனஸ் டேட்டா லம்ப்சம் முறையில் வழங்கப்படுகிறது. ஆகையால், பயனர் இதை விரும்பும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் கூடுதல் டேட்டாவின் வேலிடிட்டியும் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பே சொன்னது போல, இந்த திட்டத்தில் 5G வெல்கம் ஆஃபரும் கிடைக்கிறது. எனவே, உங்களிடம் 5G ஃபோன் இருந்தால், அது 5G SA (ஸ்டாண்ட் அலோன்) மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் 5G கவரேஜின் கீழ் இருந்தால், நீங்கள் வரம்பற்ற 5G தரவையும் பயன்படுத்த முடியும். 4G டேட்டாவிற்கு, நீங்கள் FUP கொள்கை வரம்பை அடைந்ததும், மறுநாள் வரம்பை மீட்டமைக்கும் வரை 64 Kbps வேகத்தில் மட்டுமே டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








