ஆரம்பமே அம்பானி கை ஓங்குது போல.. IPL 2024 ஏலம்.. பரபரப்பு ஸ்டார்ட்.. LIVE ஆக பார்ப்பது எப்படி?
கடந்த பல ஆண்டுகளை போலவே.. வருகிற 2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எந்த அளவிற்கு சூடுபிடிக்க போகிறது.. எந்த அளவிற்கு பரபரப்பை கிளப்ப போகிறது என்பதை ஐபிஎல் 2024 ஏலம் (IPL 2024 Auction) தான் தீர்மானிக்க உள்ளது.
அப்படியான ஐபிஎல் ஏலம் எப்போது நடக்கும்? இதை லைவ் ஆக பார்ப்பது எப்படி? மொத்தம் எத்தனை வீரர்கள் ஏலத்திற்கு தயாராக உள்ளனர்? அதில் இந்திய வீரர்கள் எவ்வளவு? வெளிநாட்டு வீரர்கள் எவ்வளவு? யாரெல்லாம் ஏலத்தில் கவனிக்கப்படும் வீரர்களாக இருப்பர்? இதோ விவரங்கள்:

ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை வீரர்கள் (Total players) கலந்துகொள்ள உள்ளனர்?
2024 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் பங்குகொள்ள மொத்தம் 333 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை இந்திய வீரர்கள் (Indian players) கலந்துகொள்ள உள்ளனர்?
ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்குகொள்ள இந்தியாவில் இருந்து மொத்தம் 214 கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 ஏலத்தில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் (Overseas players) பங்கேற்க உள்னனர்?
ஐபிஎல் 2024 ஏலத்தில் மொத்தம் 119 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளை சேர்ந்த 2 கிரிக்கெட் வீரர்கள் பங்குகொள்ள உள்ளனர்.
ஐபிஎல் 2024 ஏலக் குழுவில் எத்தனை அன்கேப்டு வீரர்கள் (Uncapped players) பட்டியலிடப்பட்டுள்ளனர்?
ஐபிஎல் 2024 ஏலக் குழுவில் மொத்தம் 215 வீரர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 பேர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

2024 ஐபிஎல் அணி உரிமையாளர்கள் நிரப்புவதற்கு மொத்தம் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன?
ஐபிஎல் 2024 இல் பங்கேற்கும் 10 அணிகளிலும் அதிகபட்சமாக 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில் வெளிநாட்டு வீரர்களுக்கென 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எத்தனை வீரர்கள் ரூ.2 கோடி என்கிற அடிப்படை விலைக்கு தங்களை பட்டியலிட்டுள்ளனர்?
மொத்தம் 23 வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலைக்கு பட்டியலிட்டுள்ளனர்.
1.5 கோடி என்கிற அடிப்படை விலையில் எத்தனை வீரர்கள் தங்களை பட்டியலிட்டுள்ளனர்?
ஐபிஎல் 2024 ஏலத்தில் மொத்தம் 13 வீரர்கள் தங்களை ரூ. 1.5 கோடி என்கிற அடிப்படை விலைக்கு பட்டியலிட்டுள்ளனர்.
ரூ.1 கோடி அடிப்படை விலையில் எத்தனை வீரர்கள் தங்களை பட்டியலிட்டுள்ளனர்?
ஐபிஎல் 2024 மினி ஏலத்திற்கான அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மொத்தம் 14 வீரர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஐபிஎல் 2024 ஏலம் எந்த தேதியில் நடைபெறும்?
ஐபில் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின், 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம், முதல் முறையாக இந்தியாவுக்கு வெளியே நடக்க உள்ளது. இது டிசம்பர் 19 ஆம் தேதியன்று துபாயில் (Dubai) நடைபெற உள்ளது.
ஐபிஎல் 2024 ஏலத்தின் லைவ் ஸ்ட்ரீமிங்கை (Live Streaming) பார்ப்பது எப்படி?
ஐபிஎல் 2024 ஏலத்தை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் பொறுப்பு முகேஷ் அம்பானி கைகளுக்குள் சென்றுள்ளது. ஜியோ சினிமா ஆப் மற்றும் வலைத்தளம் (Jio Cinema App and Website) வழியாக இந்த ஏலம் நேரடியாக ஒளிபரப்பப்படும். கூடவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி/எஸ்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி/எஸ்டி, மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி 1 எச்டி/எஸ்டி ஆகிய சேனல்களும் இந்த ஏலத்தை நேரடியாக ஒளிபரப்பும்.
இந்திய நேரப்படி ஐபிஎல் 2024 எப்போது தொடங்கும்?
ஐபிஎல் 2024 ஏலம் இந்திய நேரப்படி டிசம்பர் 19 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும்.
யாரெல்லாம் கவனிக்கப்பட வேண்டிய வீரர்களாக உள்ளனர்?
ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸி.


Click it and Unblock the Notifications








