டிவிஸ்ட்.. குறுக்க வந்த அம்பானி.. இனி IPL 2023 போட்டிகளை FREE ஆக.. LIVE ஆக.. இப்படித்தான் பார்க்கணும்!
பொது மக்களை பொறுத்தவரை இது சம்மர் சீசன். ஆனால் கிரிக்கெட் பிரியர்களை பொறுத்தவரை - அடுத்த 2 மாதங்களுக்கு - இது ஐபிஎல் சீசன். ஏனென்றால் ஐபிஎல் (IPL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) 16வது சீசன் இன்று (அதாவது மார்ச் 31) முதல் தொடங்குகிறது.
மொத்தம் 74 போட்டிகளை உள்ளடக்கிய ஐபிஎல் 2023 சீசனின் (IPL 2023 Season) அனைத்து கிரிக்கெட் போட்டிகளையும், வழக்கம் போல மொபைல், லேப்டாப் மற்றும் டேப்லெட் (ஓடிடி பிளாட்ஃபார்ம்) வழியாகவும், டிவி (ஓடிடி + சேனல்) வழியாகவும் பார்க்க முடியும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எந்த ஓடிடி தளம் (OTT Platform) வழியாக பார்க்க முடியும் என்பதில் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது.

குறுக்க வந்த அம்பானி! கடந்த ஆண்டுகளை போல ஐபிஎல் போட்டிகளை காண டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் பக்கம் சென்று விடாதீர்கள். ஏனென்றால் ஐபிஎல் 2023-ஐ ஒளிபரப்பும் உரிமையை ரூ.20,500 கோடி செலுத்தி வயாகாம் 18 (Viacom 18) கைப்பற்றி உள்ளது. அதாவது ஐபிஎல் 2023-ஐ ஒளிபரப்பும் உரிமையானது ஹாட்ஸ்டாரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
இந்த 2023 ஆம் ஆண்டு முதல் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் வரையிலாக, ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் வயாகாம் 18-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் வயாகாம் 18, பாரமவுண்ட் குளோபல் (Paramount Global) மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Ltd) ஆகியவற்றின் கூட்டணியில் உருவான ஒரு மீடியா நெட்வொர்க் ஆகும்.
இனிமேல் இப்படித்தான் பார்க்கணும்! ஐபிஎல் 2023 போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமம் வயாகாம் 18-க்கு கிடைத்ததை தொடர்ந்து, இந்தாண்டு நடக்கவுள்ள 74 ஐபிஎல் போட்டிகளும் ஜியோ சினிமா ஆப் (Jio Cinema App) வழியாக முற்றிலும் இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் (Free Live Stream) செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அனைத்து ஐபிஎல் போட்டிகளும் ஆங்கிலம் (English), தமிழ் (Tamil), இந்தி (Hindi) உள்ளிட்ட 12 மொழிகளில், 4கே ரெசல்யூஷனில் (அல்ட்ரா எச்டி) இலவசமாக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நினைவூட்டும் வண்ணம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்பது ஒரு கட்டண ஓடிடி சேவையாக இருந்தது, ஐபிஎல் போட்டிகளை பார்க்க பணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்தாண்டு அப்படி இல்லை!
நீங்களொரு ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் போதும், இலவசமாக கிடைக்கும் ஜியோ ஆப்ஸ் தொகுப்பில் உள்ள ஜியோ சினிமா ஆப் வழியாக அனைத்து ஐபிஎல் 2023 போட்டிகளையும் இலவசமாக, நேரடியாக பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் டிவி வழியாக ஐபிஎல் 2023 போட்டிகளை பார்க்க விரும்பினால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கை (Star Sports Network) அணுகவும்.
ஏனென்றால் ஐபிஎல் 2023 போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தான் பெற்றுள்ளது. இந்தாண்டு மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தான் வாங்கியுள்ளது. இதற்காக மொத்தம் 23,575 கோடிகளை செலவு செய்துள்ளது!


Click it and Unblock the Notifications








