ஐபிஎல் லைவ் இலவசமா பார்க்கனுமா?- இதான் ஒரே வழி: உடனே முந்துங்கள்!

|

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதை இலவசமாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் தொடர் அறிவிப்பு

ஐபிஎல் தொடர் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவல் ஐபிஎல் தொடரை நடத்தவிடாமல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிவிடுமோ என்ற கேள்வி சமூகவலைதளங்களை ஒரு கலக்குகலக்கியது. இதற்கு ஒருவழியாக முடிவு காணப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைப்பு

கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைப்பு

கடந்த மார்ச் மாதம் நடக்கவிருந்த ஐபிஎல் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்து அறிவித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்

இதற்கான ஏற்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னதாகவே தொடங்கி விட்டது எனவும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற ஆகஸ்ட் 20 முதல் ஐக்கிய அரபு அமீரகம் கிளம்ப உள்ளனர்.

இரண்டு முறை கொரோனா பரிசோதனை

இரண்டு முறை கொரோனா பரிசோதனை

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. அதேபோல் இந்த தொடரில் பங்கேற்கும் அனைவரும் பிசிசிஐ விதித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு

ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மறுபுறம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் உண்மையா? இவர்களுக்கு மட்டும் நிச்சயம் இ-பாஸ் கிடையாதுஇன்று முதல் அனைவருக்கும் இ-பாஸ் உண்மையா? இவர்களுக்கு மட்டும் நிச்சயம் இ-பாஸ் கிடையாது

கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி

கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி

கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் செமி ஃபைனல் ஆகும். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக தோனி களமிறங்கும் ஐபிஎல் தொடர் நடைபெறும் நாட்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங்

ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங்

ஐபிஎல் அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான லைவ் ஸ்ட்ரீமிங் உரிமத்தை ஹாட்ஸ்டார்தான் பெற்றுள்ளது. இந்த போட்டியை ஹாட்ஸ்டார் மூலம் நேரலையில் காண டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டால் விஐபி உறுப்பினராக குழு சேர வேண்டும் அல்லது ஹாட்ஸ்டார் லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கான அணுகல் பெற்றிருக்க வேண்டும்.

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்

ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட்

ஜியோ பயனர்களுக்கு நிறுவனம் சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன், ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் ஆகிய சில திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும்போது பயனர்கள் ஐபிஎல் போட்டி நேரலையை பார்க்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

ஐபிஎல் 2020 தொடர் லைவ் ஸ்ட்ரீமிங்

ஐபிஎல் 2020 தொடர் லைவ் ஸ்ட்ரீமிங்

ரூ.849 சில்வர் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும்போது ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் ஐபிஎல் 2020 தொடரை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கலாம். இந்த திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி இலவச வருடாந்திர சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் 800 ஜிபி டேட்டா தரவு மற்றும் வரம்பற்ற குரலழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

வரம்பற்ற குரல் அழைப்புகள்

வரம்பற்ற குரல் அழைப்புகள்

கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.401 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு இதிலும் ஹாட்ஸ்டார் விஐபி இலவச அணுகலை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 90 ஜிபி அதிவேக டேட்டாவை நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.

அதிக இணையம் தேவைப்படும்

அதிக இணையம் தேவைப்படும்

பொதுவாக ஐபிஎல் போட்டியை ஸ்டீமிங் செய்து பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இங்கே ஹாட்ஸ்டார் அணுகலை மட்டும் பெறவேண்டும் என்பதைவிட டேட்டா அளவு என்பது முக்கியமான ஒன்று. நாம் ஐபிஎல் தொடரை ஹெச்டி க்வாலிட்டியில் பார்க்க விரும்பும்போது அதற்கான இணைய வேகமும் அளவும் முக்கியம். அதற்கேற்ப கணித்த தங்களது கணக்கை ரீசார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Ipl 2020 Live Stream: Here the Reliance Jio offers to Watch Live Stream

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X