ஐபிஎல் 2020: இந்த நான்கு திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.!
மிகவும் எதிர்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் இன்று முதல் துவங்குகிறது. அதாவது இந்த ஐபிஎல் போட்டிகள் ஒரு விளையாட்டுத் திருவிழா உணர்வை மீண்டும் நமக்குள் கொண்டுவந்துள்ளது என்றே கூறவேண்டும். குறிப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு எம்.எஸ் தோனி களமிறங்குவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்று மாலை 7.30மணிக்கு அபுதாபி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பிக்கும் இந்த சீசனின் முதல் போட்டியானசென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன் ஐபில் மேட்சை எப்படி இலவசமாகப் பார்ப்பது என்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க அனுமதிக்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன, அவைகளில் எது சிறந்தது என்று நீங்களே இதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி அம்பானி தலைமையிலான ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே டிஸ்னி 10 ஹாட்ஸ்டார் விஐபியின் சந்தாவை இலவசமாக வழங்கும் திட்டங்களை தன்வசம் கொண்டுள்ளன. அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த ரூ.499-திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் கால் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. ஆனால் ரூ. 399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு ஒரு வருட சந்தாவுடன் இந்த திட்டம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.777-திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.777-திட்டம் ஆனது தினசரி 1.5டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84நாட்கள் ஆகும். மேலும் ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுடன் பேச 3000நிமிடங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்குமான இலவச சந்தாவுடன் ஓராண்டிற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.599-திட்டம்
ஐபிஎல் 2020-ஐ இலவசமாக பார்க்கு உதவும் ஏர்டெல்லின் சிறப்பு திட்டம் என்னவென்றால், அது ரூ.599-விலை கொண்ட திட்டமாகும். அதன்படி ஏர்டெல்லின் ரூ.599-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை நன்மையை வழங்குகிறது. மேலும் 56நாட்கள் வேலிடிட்டி-ஐகொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம். மேலும் பயனர்களுக்கு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும்தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டம் ஒரு வருடத்திற்க்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின்OTT நன்மையுடனும் வருகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.2698-திட்டம்
ஐபிஎல் 2020-ஐ இலவசமாக பார்க்க உதவும் மற்றொரு ஏர்டெல் திட்டம் ரூ.2,698-ஆகும். இந்த ஏர்டெல் ரூ.2698-திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் 365நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த அட்டகாசமான திட்டம். பயனர்களுக்கு இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டம் ஒரு வருடத்திற்க்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபியின் OTT நன்மையுடனும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications