ஐபோன்களை பயன்படுத்தி விரைவில் கதவுகளை திறக்கலாம்!
இந்த அமைப்பு கொண்ட அப்ளிகேஷனை, தற்போது மாதந்தோறும் $9.99 செலுத்தி, 200-க்கும் மேற்பட்ட இதழ்களைப் பெற முடிகிறது.
ஒரு பெரிய அளவிலான மேம்பாட்டை அளிக்க, ஆப்பிள் நிறுவனம் தயாராகி வருகிறது. உங்கள் கார் மற்றும் வீட்டின் கதவை திறப்பதற்கு, ஐபோன்கள் விரைவில் உதவ போகின்றன. இதை படிப்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா? ஆம் நீங்கள் படித்தது உண்மை தான். தனது என்எஃப்சி சாதனங்களில் பெரிய அளவிலான மேம்பாட்டை அளிப்பது தொடர்பாக, ஆப்பிள் நிறுவனம் பணியாற்றி வருவதாக, சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஐபோன்களில் உள்ள என்எஃப்சி சிப்கள் மூலம் ஆப்பிள் பே மூலம் கட்டணங்களைச் செலுத்த முடிகிறது. மேற்கூறிய இந்த புதிய அம்சங்களை ஆப்பிள் நிறுவன பணியாளர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருவதாக, அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
மேலும் அந்த அம்சத்தைப் பயன்படுத்தி, தங்கள் அலுவலகங்களில் உள்ள ஸ்மார்ட் லாக்குகள் திறக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஐபோன்களில் உள்ள ப்ளூடூத் மற்றும் என்எஃப்சி ஆகியவற்றை பயன்படுத்தி, கதவுகளைத் திறப்பது அதிக பாதுகாப்பான தேர்வாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்த புதிய வசதியை ஐபோன்களில் அளிக்கும் வகையில், ஹெச்ஐடி குளோபல் உடன் ஆப்பிள் நிறுவனம் செயலாற்றி வருவதாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து டிரான்ஸிட் கார்டு உருவாக்கும் நிறுவனமான குபிக் உடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இப்போது ஜப்பான், சீனாவின் சில பகுதிகள், லண்டன் மற்றும் ஒரு சில அமெரிக்க நகரங்கள் போன்ற இடங்களில் இருந்து ஆப்பிள் பே மூலம் கட்டணங்களைச் செலுத்த முடியும். ஆனால் ஐபோன்களுக்கு குபிக் நிறுவனம் அளிக்க உள்ள டிரான்ஸிட் கார்டுகளைப் பயன்படுத்தி, உலகம் எங்கும் உள்ள லட்சக்கணக்கானோருக்கு சேவையை வழங்க முடியும்.

இந்த புதிய என்எஃப்சி சேவையைக் குறித்து வரும் ஜூன் மாதத்தில் டபிள்யூடபிள்யூடிசியில் அறிவிக்கும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த அம்சம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு, கடந்த 2014 ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய ஐபோன்களில் கூட, இந்த சாஃப்ட்வேர் மேம்பாட்டை பதிவிறக்கம் செய்து, இதை பயன்படுத்த முடியும்.
சமீபத்தில் மீடியாவின் டிஜிட்டல் இதழ் சேவையின் அமைப்பு குறித்து எழுந்த மற்றொரு பிரச்சனையை ஆப்பிள் நிறுவனம் தீர்த்து வைத்துள்ளது. இந்நிலையில், ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ஆப்பிள் நியூஸ் உடன் கூடிய இதழ் அமைப்பில் பொருந்தும் ஒரு செய்தி சந்தா சேவையை, இந்நிறுவனம் விரைவில் துவக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு கொண்ட அப்ளிகேஷனை, தற்போது மாதந்தோறும் $9.99 செலுத்தி, 200-க்கும் மேற்பட்ட இதழ்களைப் பெற முடிகிறது. இதன் பிரிமியம் சேவையை வழங்கும் வகையில், அமைப்பு மற்றும் ஆப்பிள் நியூஸ் பணியாளர்களையும் இந்நிறுவனம் ஒன்றிணைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்பட்ட ஆப்பிள் நியூஸ் அப்ளிகேஷன், அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை, துவக்க முயற்சியாக ஆன்லைன் இதழ் சேவையை அளிக்கும் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளது.

பயனர்களுடன் அதிக தொடர்புடையதாக செய்திகளை அளித்து, புதிய மற்றும் எளிமையாக்கப்பட்ட சேவையை அளிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்முலம் சமீபத்தில் இந்நிறுவனம் சந்தித்த இழப்பை ஈடுகட்டவும் முடியும். முன்னதாக, காப்புரிமை மீறல் தொடர்பான சட்டங்களின் கீழ், விர்நெட்எக்ஸ் வைத்துள்ள நிறுவனத்திற்கு $502.6 மில்லியன் செலுத்த வேண்டும் என்று இந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பான தகவல் தொடர்புகள் தொடர்பான காப்புரிமை மீறலில் ஈடுபட்டதாக, ஆப்பிள் நிறுவனம் கண்டறியப்பட்டதால், டெக்சஸில் உள்ள நீதிபதிகளால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications