ரூ.47,699/-க்கு ஐபோன் எக்ஸ்; பல ஐபோன் மடல்களுக்கு 50% அதிரடி தள்ளுபடி.!
சங்கீதா மொபைல்ஸ் வெளியிட்டுள்ள ஆபர் பக்கத்தின் படி, ஐபோன் எக்ஸ் கருவியின் 64 ஜிபி மாறுபாடானது ரூ.47,699/-க்கு வாங்க கிடைக்கும்.
ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 6, ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் எஸ்இ உள்ளிட்ட பல ஐபோன் மாதிரிகளுக்கு 50% தள்ளுபடியை இந்திய மொபைல் விற்பனையாளர் நிறுவனங்களில் ஒன்றான சங்கீதா மொபைல்ஸ் அறிவித்துள்ளது.

இதுவொரு நம்பமுடியாத வாய்ப்பைப் போல ஒலித்தாலும், விற்பனையாளரின் நேர்த்தியான பங்களிப்புடன் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எச்.டி.எஃப்.சி வங்கியின் கேஷ்பேக் ஆபர், எக்ஸ்சேன்ஜ் ஆபர் மற்றும் ஈ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கான சில்லறை விற்பனையாளரின் தள்ளுபடி ஆகியவற்றின் கலவையாக இந்த சலுகை திகழ்கிறது.

ஐபோன் எக்ஸ் 64 ஜிபி
எல்லா சங்கீதா மொபைல்ஸ் சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் இந்த வாய்ப்பில் எந்தெந்த ஐபோன்களுக்கு என்ன தள்ளுபடி என்பதை விரிவாக காண்போம். சங்கீதா மொபைல்ஸ் வெளியிட்டுள்ள ஆபர் பக்கத்தின் படி, ஐபோன் எக்ஸ் கருவியின் 64 ஜிபி மாறுபாடானது ரூ.47,699/-க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.12,000/- கேஷ்பேக்
இதில் எச்டிஎஃப்சி அட்டைகள் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு கிடைக்கும் கேஷ்பேக் ஆன ரூ.12,000, இஎம்ஐ பரிவர்த்தனைகளில் 5% தள்ளுபடி (ரூ .1,500 வரை), மற்றும் எக்ஸ்சேன்ஜ் செய்யப்படும் கைபேசிகளுக்கு ஏற்ற விலை ஆகிய அனைத்தும் அடங்கும்.

ஐபோன் 6 32 ஜிபி
கூடுதலாக, வெளியிடப்பட்டுள்ள ஆபர் பக்கமானது ஐபோன் எஸ்இ கருவியின் 32 ஜிபி மாதிரியை குறைந்தபட்ச விலையாக ரூ.9,990/-க்கு தொகுத்துள்ளது. மேலும் ஐபோன் 6 கருவியின் 32 ஜிபி சேமிப்பு மாறுபாட்டை ரூ.14,990/-க்கு டிஜிஓகுத்துள்ளது.

ஐபோன் 8 64ஜிபி
மறுகையில் உள்ள ஐபோன் 6எஸ் கருவியின் 32 ஜிபி மாறுபாட்டை குறைந்தபட்ச விலையாக ரூ.21,499/-க்கும் மற்றும் ஐபோன் 8 கருவியின் 64ஜிபி மாறுபாட்டை ரூ.25,500/-க்கும் விற்பனை செய்கிறது.

ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி
அதேபோல், ஐபோன் 8 பிளஸ் கருவியின் 64 ஜிபி மாறுபாட்டை ரூ.33,999/-க்கும், மற்றும் ஐபோன் 8 பிளஸ்-ன் 256 ஜிபி மாறுபாட்டை தள்ளுபடி விலையில் ரூ.45,499/-க்கும் சலுகை பக்கத்தில் தொகுத்துள்ளது.

உத்தியோகபூர்வ பிராண்ட் உத்தரவாதம்
குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக, நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் ஸ்மார்ட்போன் ஆனது உத்தியோகபூர்வ பிராண்ட் உத்தரவாதத்தில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்ற மொபைல்களின் மீதான குறிப்பிடப்பட்ட சலுகைளுக்கான விவரங்களை சங்கீதா மொபைல்ஸ் ஆஃப்லைன் ஸ்டோரிகளில் பார்வையிட முடியும்.

புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா
சங்கீதா மொபைல்ஸ் ஆனது ஆந்திரா, பீகார், குஜராத், கர்நாடகா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் உள்ளது. மேலும் பல சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications